பசிபிக் கடலில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்.. அதுக்கு அவங்க சொன்ன காரணத்தை கேட்டு திகைச்சுப்போன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பசிபிக் பெருங்கடலின் கடற்கரை ஒன்றில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர்.

பசிபிக் கடலில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்.. அதுக்கு அவங்க சொன்ன காரணத்தை கேட்டு திகைச்சுப்போன நெட்டிசன்கள்..!

தாய்மை அடைதல் ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. வளர்ந்துவிட்ட மருத்துவ புரட்சியின் பலனாக குழந்தைப்பேறு குறித்த அச்சம் தற்போது மக்களிடத்தில் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. ஆனால், ஜோசி பியூகெர்ட் என்னும் 37 வயதான பெண் ஒருவர் மருத்துவர் உதவி இல்லாமல் அதுவும் கடற்கரையில் தனது மகனை பெற்றெடுத்திருக்கிறார்.

விருப்பம்

நிகராகுவாவின் ப்ளேயா மஜாகுவால் கடற்கரையில் தான் ஜோசி தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர்," நான் சில வாரங்களாகவே கடல் அலையை ஆய்வு செய்துவந்தேன். கடற்கரையில் குழந்தையை பெற்றெடுப்பது தான் எங்களுடைய விருப்பமாக இருந்தது. அங்கு நிலவிய சூழல் பிரசவத்திற்கு உகந்ததாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம்" என்றார்.

பிரசவ வலி

ஜோசி தனக்கு பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, உடனடியாக கடற்கரைக்கு சென்றிருக்கிறார். தனது குழந்தைகளை அவரது நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு, மருத்துவ முதலுதவி கருவிகளுடன் உடன் சென்றிருக்கிறார் ஜோசியின் கணவர். கடற்கரையில் எதிர்பார்த்ததை போலவே தனக்கு சிரமங்கள் ஏதுமின்றி குழந்தை பிறந்ததாக கூறுகிறார் ஜோசி.

இதுபற்றி அவர் பேசுகையில்," நான் கவலையல்லாது இருக்க வேண்டும் என முன்னரே தீர்மானித்திருந்தேன். கடற்கரையில் மத்தியான வேளையில் எனது குழந்தையை பெற்றெடுத்தேன். அந்த தருணம் மிகவும் அழகானது. மிருதுவான மணலில் கால்பதித்து அமர்ந்திருந்த தருணம் சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே இருப்பது அழகான வாழ்க்கை ஒன்றுதான் என நினைவூட்டியது. அப்போது எனது மகனை பூமிக்கு அழைத்து வந்த சந்தோஷத்தில் நான் திளைத்திருந்தேன். அதன்பிறகு, நாங்கள் எங்களது வீட்டிற்கு திரும்பினோம். எங்களது மகனுக்கு போதி ஆமோர் எனப் பெயர் சூட்டியுள்ளோம். தற்போது போதி 3.5 கிலோ எடையுடன் இருக்கிறான்" என்றார்.

எச்சரிக்கை

கடற்கரையில் மருத்துவர்கள் துணை இல்லாது தாமாக ஜோசி என்பவர் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டுவருகிறது. இதனிடையே மருத்துவர்கள் உதவி இல்லாமல் இதுபோன்ற முயற்சிகளில் மக்கள் இறங்குவது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

BIRTH, SEA, BEACH, குழந்தைப்பேறு, கடற்கரை, பிரசவம்

மற்ற செய்திகள்