'கருப்பின' போராட்டக்காரர்களின் 'கூட்டத்திற்குள் புகுந்த லாரி...' 'சிதறி ஓடிய கூட்டம்...' ஓட்டுநரை 'சரமாரியாக' 'தாக்கிய கும்பல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கருப்பின இளைஞர் படுகொலைக்கு நீதி கேட்டு மின்னிபொலிஸ் நகரில் நடைபெற்று வந்த போராட்ட கூட்டத்திற்குள் தறிகெட்டு வந்த லாரி ஒன்று புகுந்ததால் அங்கிருந்தவர்கள் தெரித்து ஓடினர்.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார். இதற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் நடைபெற்ற மின்னிபொலிஸ் நகரில் ஏராளமானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்னிபொலிஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏராளமானோர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே தறிகெட்டு வந்த லாரி ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து நின்றது. முதலில் சிதறி ஓடிய கூட்டத்தினர் பின்னர் லாரி ஓட்டுநரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
இதில் லேசான காயமடைந்த அந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோக்கம் என்ன என்று தெரியாத நிலையில், வேண்டுமென்றேதான் இந்த சம்பவத்தை செய்திருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மற்ற செய்திகள்