COBRA M Logo Top

திருமணத்துக்கு முன் நடந்த போட்டோஷூட்.. திடீர்னு பாய்ந்த மின்னல்.. கொஞ்ச நேரத்துல வெலவெலத்துப்போன மணமகள்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருமணத்திற்கு முன்னர் நடைபெற்ற போட்டோஷூட்-ல் மின்னல் தாக்கி மணமகன் உயிரிழந்த சம்பவம் சீனா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்துக்கு முன் நடந்த போட்டோஷூட்.. திடீர்னு பாய்ந்த மின்னல்.. கொஞ்ச நேரத்துல வெலவெலத்துப்போன மணமகள்.!

Also Read | சோசியல் மீடியாவில் சர்ச்சை பதிவு.. பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் விதித்த தண்டனை.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு..!

புகைப்படம் 

திருமணங்களில் புகைப்படம் எடுப்பது பல்வேறு விதங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு பிரீ வெட்டிங் போட்டோஷூட் என தம்பதியர் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்து அங்குசென்று போட்டோஷூட்களை நடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி திருமணத்திற்கு முன்னர் தனது எதிர்கால மனைவியுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற மணமகன் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.

The groom is dead after a lightning strike while the photoshoot

சோகம்

தென்மேற்கு சீனாவில், யுனான் மாகாணத்தில் உள்ள, “ஜேட் டிராகன் ஸ்னோ மௌண்டைன்” எனும் இடத்திற்கு இந்த தம்பதி புகைப்பட குழுவினருடன் சென்றிருக்கிறார்கள். கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி 'ஸ்ப்ரூஸ் மெடோ' எனும் இடத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. நண்பகல் வரை நடந்த இந்த போட்டோஷூட் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது மின்னல் தாக்கியதில் மணமகன் ரூவான் என்பவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த குழுவினர் அங்கிருந்து அவரை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இருப்பினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த விபத்தில் மணமகனை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்னலால் தாக்கப்பட்ட மணமகனை அங்கிருந்தவர்கள் ஸ்டெச்சரில் தூக்கிச்செல்லும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி பலரையும் கலங்க செய்திருக்கிறது.

The groom is dead after a lightning strike while the photoshoot

எச்சரிக்கை

இதனிடையே அந்த பகுதியில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில், மஞ்சள் எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் போட்டோஷூட்களை நடத்தவேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்திருந்ததையும் மீறி இந்த குழு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. சீனாவில் வருடத்திற்கு 4000 பேர் மின்னல் தாக்கி மரணமடைவதாக 2017 ஆம் ஆண்டு வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இப்படி ஒரு திறமையா.?".. விநாயகர் சிலைகளை தத்ரூபமாக உருவாக்கும் சிறுவன்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!

CHINA, GROOM, LIGHTNING, STRIKE, PHOTOSHOOT

மற்ற செய்திகள்