'சோகத்தில் முடிந்த ஈஸ்டர் கொண்டாட்டம்'...தேவாலயத்தில் தெறித்த ரத்தம்...பலியான 'இந்தியர்கள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் நேற்று நடைபெற்ற கோர குண்டுவெடிப்பு உலகையே அதிரவைத்துள்ளது.

'சோகத்தில் முடிந்த ஈஸ்டர் கொண்டாட்டம்'...தேவாலயத்தில் தெறித்த ரத்தம்...பலியான 'இந்தியர்கள்'!

ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று,கிறிஸ்தவர்கள் பலர் தேவாலயங்களில் பிராத்தனைக்காக கூடியிருந்தனர்.அந்த நேரத்தில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம்,மட்டக்களப்பு தேவாலயம்,கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன.இந்த கோர தாக்குதலில் இதுவரை 290 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.450-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று நடந்த கோர தாக்குதலில் இந்தியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக  இந்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் 'இலங்கையிலுள்ள இந்திய தூதருடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.அங்குள்ள நிலைமையினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.அங்கு பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் விரைவாக செய்யப்படும்' என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உயிரிழந்த ஐந்து இந்தியர்களின் விவரங்களை குறிப்பிட்டுள்ளார், லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்,ரங்கப்பா மற்றும் ஹனுமந்தாராயப்பா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குறித்து மற்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதேபோல், துபாய்க்கு குடிபெயர்ந்த வந்த கேரளத்தை சேர்ந்த ரசீனா 58 என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை வெடிகுண்டு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து தாக்கினர். அப்போது மனிதகுண்டு வெடித்ததில் 3 போலீஸார் உயிரிழந்தனர்.

SRILANKA, SRI LANKA SERIAL BLASTS, COLOMBO, #SRILANKAATTACKS, #SRILANKABLASTS