'வானில் நடக்க போகும் அதிசய நிகழ்வு'... 'சூப்பர் பிளட் மூன்'... இந்தியாவில் பார்க்க முடியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

'வானில் நடக்க போகும் அதிசய நிகழ்வு'... 'சூப்பர் பிளட் மூன்'... இந்தியாவில் பார்க்க முடியுமா?

முழு சந்திர கிரகணம் என்பது வானில் நிகழும் ஒரு அற்புத நிகழ்வாகும். அதன்படி 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை 3.15 முதல் 06.23 வரை நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்படும் முழு சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தின் வழியாகப் பயணித்து, நிலவைச் சென்றடைகிறது. எனவே நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுவதால், "இரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது.

மேலும் சூரிய அஸ்தமனத்தை ஒத்த பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளிச்சம் சிதறடிக்கப்படுவதால் தூசுகளும் மேகங்களும் ஒன்றாகச் சூழ்வதால், சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் தான் சூப்பர் ப்ளட் மூன் (Super Blood Moon) என்றும் அழைக்கப்படுகிறது.

வானியல் அறிஞர்களின் கூற்றுப்படி சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் "ஃப்ளவர் சந்திரன்" (Flower Moon) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை "சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்" (Super Flower Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.

The first lunar eclipse of 2021 is going to happen on May 26

சந்திர கிரகணத்தின் நிகழ்வு இந்தியாவில் பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடிவடையும். அதேபோல முழு சந்திர கிரகணம் மாலை 4.41 முதல் 4.58 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நிகழும் என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்