Valimai BNS

"என் சோக கதையை கேளுங்க'.. கஷ்டப்படுத்திய போனை Frame செய்து மாட்டிய கஸ்டமர்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடல் போனால் ஏற்பட்ட அனுபவத்தை வாடிக்கையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்கி நான் பட்ட கஷ்டம் என்ற வாக்கில் அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது  பதிவில் உடைந்து போன கேலக்ஸி Z ஃப்ளிப் 3 போனை ஃபிரேம் செய்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

"என் சோக கதையை கேளுங்க'.. கஷ்டப்படுத்திய போனை Frame செய்து மாட்டிய கஸ்டமர்..

வைரல் புகைப்படத்தின் படி, ஃபிரேம் ஒன்றில் உடைந்த நிலையில் உள்ள வாடிக்கையாளரின் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மற்றும் வாரண்டியில் அந்த போனை சரி செய்ய முடியாது என சாம்சங் கொடுத்த கடிதம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தான், இனி சாம்சங் சாதனம் எதையும் வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளார். போன் வாங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

இந்த வாடிக்கையாளரின் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடல் ஸ்கிரீனின் மத்தியில் கருப்பு நிறத்திற்கு மாறியது. பின் ஒருபக்க ஸ்கிரீன் தொடுதிரை வேலை  செய்யமால் போனது. போனினை தான் கீழே போடவே இல்லை என அந்த வாடிக்கையாளர் அடித்துக் கூறுகிறார். மேலும் போனிற்கு வாரண்டி இருந்ததால், அதனை சரி செய்ய அவர் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலை சரிவீஸ் செண்டர் கொண்டு சென்றார்.

The customer who stuck the frame to the Samsung phone

அப்போது, "சாதனம் வாரண்டியின் கீழ் சரி செய்யப்பட மாட்டாது. நீங்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட்போனினை சரிசெய்யும் வல்லுனர்குழுவுக்கு அனுப்பினோம். ஆய்வில் போனின் டிஸ்ப்ளே மட்டுமின்றி ஃபிரேம் உடைந்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. போன் கீழே விழுந்து, அளவுக்கு மீறிய அழுத்தம் அல்லது வளைக்கப்பட்டு இருத்தல் போன்ற காரணிகளால் உடைந்து இருக்கும் " என்றும் சாம்சங் பதில் அளித்துள்ளது. அதனோடு,  உடைந்த ஸ்மார்ட்போனை சரி செய்ய 340 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 25,609 வரை செலவாகும் என சாம்சங்  தெரிவித்து இருக்கிறது.

இதனால் உடைந்து போன ஸ்மார்ட்போனை சரி செய்ய சாம்சங்கிற்காக ஒரு பைசா கூட செலவு செய்ய முடியாது என முடிவு செய்து உடைந்த போன் மற்றும் சாம்சங் அளித்த பதில் ஆகியவற்றை நினைத்து நொந்து போன வாடிக்கையாளர் அந்த போனை ஃபிரேம் செய்து வைத்துள்ளார்.  மேலும் சாம்சங் நிறுவனம் சார்பாக முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

SAMSUNG, MOBILE PHONE, FRAME, VIRAL, TWITTER

மற்ற செய்திகள்