"37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கிய விமானம் " உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிய மர்மத்தின் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஒரு விமானம் 37 ஆண்டுகளுக்கு பின்னர் தரையிறங்கியதாக ஒரு செய்தி சமீப காலங்களில் உலகம் முழுவதும் பேசப்பட்டுவந்தது. அதன் பின்னணி மக்களை இன்னும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
விமானம்
உலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவம் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரித்துக் கூறப்படும் நிகழ்வை கண்டிருப்போம். இணையம் பெருமளவு மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட பின்னர் இப்படி பல செய்திகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த விமானம் ஒன்றின் கதையும் சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
காணாமல் போன விமானம்
1955 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து 57 பயணிகளுடன் கிளம்பிய Pan AM 914 விமானம் கொஞ்ச நேரத்திலேயே ரேடாரில் இருந்து தப்பியதாகவும் பிறகு அந்த விமானம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று 1985 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டது. அந்த செய்தியில் "1955 ஆம் ஆண்டு கிளம்பிய இந்த விமானம் சுமார் முப்பத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி விமான நிலையத்தில் தரை இறங்கியது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி வெளிவந்த உடனேயே இது குறித்த பல யூகங்களும் புயல் கணக்கில் உருவாகின. அதாவது இந்த விமானம் காலப் பயணம் செய்து பின்னர் மீண்டும் திரும்ப வந்திருப்பதாகவும் ஏலியன்கள் இந்த விமானத்தை கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் பல்வேறு கதைகள் யூகங்களின் அடிப்படையில் பரப்பப்பட்டன.
உண்மை என்ன?
37 ஆண்டுகளுக்குப் பிறகு விமானம் ஒன்று தரை இறங்கிய சம்பவம் குறித்த அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியை பலரும் கேள்வி கேட்கத் துவங்கினர். இதனடிப்படையில் பலரும் இதுகுறித்த ஆராய்ச்சியில் இறங்கிய போது அது போலி செய்தி என்று தெரியவந்து இருக்கிறது. அந்த ஊடகம் அதே செய்தியை 1990 மற்றும் 1992 ஆம் ஆண்டு மீண்டும் பிரசுரித்திருக்கிறது.
இது குறித்து ஆய்வு செய்த சிலர் அந்த ஊடகம் தொடர்ந்து இது போன்ற கற்பனைக் கதைகளை செய்தியாக வெளியிட்டு வந்ததை தக்க ஆதாரத்துடன் விளக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த 37 வருஷம் விமான கதை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இன்றும் அதனை உண்மை என்று நம்பி பகிரும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த சம்பவம் வரலாற்றில் நடைபெறவே இல்லை என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்