Radhe Others USA
ET Others

கொரோனா பாஸிட்டிவ்.. 549 நாள் ட்ரீட்மெண்ட் முடித்து வீடு திரும்பிய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா. கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமி ஒட்டுமொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்கச் செய்து இருக்கிறது என்றால் யாராலும் மறுக்க முடியாது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய இந்த வைரஸ், உலகம் சுதாரிப்பதற்குள் கண்டங்களை கபளீகரம் செய்யத் துவங்கிவிட்டது.

கொரோனா பாஸிட்டிவ்.. 549 நாள் ட்ரீட்மெண்ட் முடித்து வீடு திரும்பிய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!

“கனத்த இதயத்துடன் இதை சொல்றேன்”.. இந்த முடிவை எடுக்க காரணம் இதுதான்.. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திடீர் அறிவிப்பு..!

கொத்துக் கொத்தாக மரணம், வேலைவாய்ப்பு இன்மை என கொரோனா ஏற்படுத்திய  தாக்கங்களை ஒற்றை கட்டுரையில் எழுதிவிட முடியாது. கொரோனாவுக்கு எதிரான ..தடுப்பூசியின் பலனாக இன்று கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் 549 நாட்களுக்கு பிறகு குணமாகி வந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் திளைக்க வைத்து இருக்கிறது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணம் ரோஸ்வெல் நகரை சேர்ந்தவர் டானல் ஹண்டர். 43 வயதான இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கும் வரவில்லை.

ஒத்துழைக்காத உடல்

கொரோனாவுக்கு எதிராக மருத்துவ உலகம் திணறிக் கொண்டிருந்த காலம் என்பதால், ஹண்டரின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக வெவ்வேறு மருத்துவமனைகளில் ஹண்டர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

The American man spent 549 days in 9 hospitals with Covid-19

ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு ஹண்டருக்கு இருந்து இருக்கிறது. இதனால் 2015 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டு இருக்கிறது. இணை நோய்கள் காரணமாக ஹண்டரால் கொரோனாவில் இருந்து உடனடியாக மீள முடியவில்லை.

குழந்தைகளை பார்க்காமல்

மருத்துவமனையில் இருந்த காலத்தில், தனது குழந்தைகளையும் மனைவியையும் ஹண்டரால் சந்திக்க முடியவில்லை. தூரத்தில் இருந்து கண்ணாடி வழியாக மட்டுமே அவரது குடும்பத்தினர் ஹண்டரை பார்த்திருக்கிறார்கள்.

தற்போது, 549 கழித்து கொரோனாவிலிருந்து வெளியேறி இருக்கிறார் ஹண்டர். 9 மருத்துவமனைகளில் ஹண்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்கிறார்கள் அவரது உறவினர். டிஸ்சார்ஜ் ஆகி, அவர் வீடு திரும்பிய போது தான் அவருக்கு பேரன் பிறந்திருப்பதே தெரியவந்து இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் பல குடும்ப நிகழ்வுகளை தன்னால் அருகில் இருந்து பார்க்க முடியாமல் போனதாக ஹண்டர் வருத்தமளிக்கிறது என்றாலும் இறுதியாக குணமாகி வந்ததே பெருமகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஹண்டரை அவரது பேரன் வரவேற்றது அவருக்கு நிச்சயம் இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.. இளைஞர் போட்ட வேறலெவல் ப்ளான்.. செம வைரல்..!

USA, AMERICAN MAN, HOSPITAL, COVID-19, HOME, கொரோனா

மற்ற செய்திகள்