'இறால் விற்ற வயது 67 வயது பாட்டியால்...' '689 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி...' - தாய்லாந்தில் நடந்த சோகம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தின் கடல்சார் உணவு சந்தையில் கொரோனா பாதிக்கப்பட்ட 67 வயதான பாட்டி இறால் விற்றதால் 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

'இறால் விற்ற வயது 67 வயது பாட்டியால்...' '689 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி...' - தாய்லாந்தில் நடந்த சோகம்...!

தாய்லாந்தின் தலைநகரான பங்காக்கின் சமூத் சகோன் என்ற மாகாணத்தில் தான் தாய்லாந்தின் மிகப் பெரிய கடல்சார் உணவுப்பொருள் சந்தையாக விளங்கக்கூடிய மாகாசாய் சந்தை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா பரவல் குறைந்த சூழலில் தற்போது இந்தச் சந்தையின் மூலம் மீண்டும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்த மாகாணத்தை முழுமையாக மூட தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட தாய்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, 'தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவு சந்தையான மகாசாய் சந்தையில் இறால் விற்ற 67 வயதான பாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரிடமிருந்து வைரஸ் பரவத் தொடங்கி, 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்படைந்த 67 வயது மூதாட்டியோ வெளிநாடு எதுவும் செல்லவில்லை என்பதால், எப்படி அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து, அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரேநாளில் சுமார் 360 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அங்கு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு, சமூத் சகோன் மாகாணத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்