தாய்லாந்து : பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றி பதுங்கியிருந்த கடத்தல் மன்னன்.. ரகசிய தகவலால் அதிரடியாக கைது செய்த போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்து நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருந்த கடத்தல் மன்னனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
தலைமறைவு
கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்துவிட்டு முகத்தை மாற்றி வேறு ஒருவர் போல புதிய இடத்தில் சென்று வாழ்வது போல பல படங்களை நாம் பார்த்திருப்போம். அதுவும் குறிப்பாக இதே பாணியில் பல ஹாலிவுட் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், நிஜத்தில் சட்டத்தை மீறுபவர்கள் அத்தனை எளிதாக காவல்துறையினரிடம் இருந்து தப்ப முடியாது. இதனை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் தாய்லாந்து காவல்துறையினர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பேங்காக்கை சேர்ந்தவர் சஹாரத் சவான்ஜேங். இவர் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்ததாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்றுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவே இல்லை.
Images are subject to © copyright to their respective owners.
ரகசிய தகவல்
இந்த சூழ்நிலையில், கொரிய நாட்டை சேர்ந்தவர் போதை பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவருடைய அப்பார்ட்மெண்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். உள்ளே நுழைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அப்போது தன்னுடைய பெயர் ஜிமின் சியோங் என தெரிவித்திருக்கிறார் அந்த ஆசாமி.
இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் வரவே, விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர் சொல்லிய தகவல்கள் அதிகாரிகளையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. கடத்தல் வழக்கில் இருந்து தப்பிக்க நினைத்த சஹாரத், தனது முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். பல முறை அறுவை சிகிச்சை செய்த நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு அவருடைய முகமும் மாறியிருக்கிறது. கொரிய நாட்டை சேர்ந்தவர் போல இருப்பதை கண்டு, தன்னை கொரியன் எனவும் சொல்லி வந்திருக்கிறார் சஹாரத்.
Images are subject to © copyright to their respective owners.
கைது
இந்நிலையில், அவரை கைது செய்த தாய்லாந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டார்க் வெப்பில் போதை பொருட்களை பெற்று பிட்காய்ன் மூலம் அதனை விற்பனை செய்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, தென்கொரியாவிற்கு சென்று செட்டிலாக நினைத்ததாகவும் அதற்குள் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார் சஹாரத்.
புது வாழ்க்கையை துவங்க நினைத்த சஹாரத் மீண்டும் போதை பொருட்களை கடத்த முயற்சித்த போது தான் காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்