'அடேங்கப்பா'!...'இது நம்ம லிஸ்ட்'லேயே இல்லையே'...இப்படி கூட 'சிக்ஸ் பேக்' பண்ணலாமா?
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய நவீன கால இளைஞர்கள் சிலர் முறையான உடற்பயிற்சி செய்கிறார்களோ இல்லையோ,ஜிம்க்கு சென்ற சில மாதங்களிலேயே சிக்ஸ் பேக் வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் அதற்கு தகுந்த உடற்பயிற்சியோ, அல்லது உணவு பழக்கங்களையோ பின்பற்றுகிறார்களா என்பது,மிகப்பெரிய கேள்விக்குறி.இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிக்ஸ் பேக் என்பது எட்டாத கனியாகவே போய்விடுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க,தாய்லாந்து இளைஞர் ஒருவர் புது வகையான முறையில் சிக்ஸ் பேக்கை உருவாக்கியுள்ளார்.ஃபேஷன் துறையில் மாடலாக இருக்கும் பாங்க்பார்ன் ஓன்வில்லை என்ற இளைஞருக்கு சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.ஆனால் அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர் எதிர்பார்த்தது போன்ற சிக்ஸ் பேக் அமைப்பு அவருக்கு கிடைக்கவில்லை.எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்த போதிலும் வயிற்று பகுதியில் இருந்த கொழுப்பு மட்டும் குறையவே இல்லை.
இந்நிலையில் உடற்பயிற்சி செய்யாமலே சிறப்பு அறுவை சிகிச்சை மூலம்,சிக்ஸ் பேக் பெரும் சிகிச்சையினை மாஸ்டர்பீஸ் என்ற மருத்துவமனையை செய்வதாக அறிந்த அவர்,அங்கு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.அதிக எடையுள்ளவர்களுக்குக் கொழுப்பை குறைக்கச் செய்யப்படும் லிபோசக்ஷன் என்ற முறைப்படி முதலில் வயிற்றில் உள்ள கொழுப்புகள் நீக்கப்படுகிறது. பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அவர்களுக்குத் தேவையான சிக்ஸ் பேக், எயிட் பேக் ஆகியவை பொருத்தப்படுகிறது.
இந்த அறுவை சிகிக்சை மூலம் சிக்ஸ் பேக்கை பெற்ற பாங்க்பார்ன்,தற்போது மகிழ்ச்சியுடன் தனது மாடலிங் தொழிலை தொடர்ந்துள்ளார்.தற்போது பிரபலம் ஆகி வரும் இந்த சிகிச்சையினை பெறுவதற்கு பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு 3,000 பவுண்டுகள் வரை செலவாகும் (இந்திய மதிப்பில் 2,71,843 ) ஒரு வருடத்துக்கு 15 முதல் 20 இளைஞர்கள் இந்த சிகிச்சையை பெறுவதற்கு ஆர்வம் காட்டுவதாக அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.