'என்னோட கனவுல கடவுள் வந்தார்'... 'அவர் சொன்ன ஒரே ஒரு சூப்பர் தகவல்'... ஒரே நாளில் '6 கோடிக்கு' அதிபதியான ஏழை இளைஞர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாலிபர் ஒருவரின் கனவில் கிடைத்த தகவலால், அவரின் ஏழை குடும்பத்தின் வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

'என்னோட கனவுல கடவுள் வந்தார்'... 'அவர் சொன்ன ஒரே ஒரு சூப்பர் தகவல்'... ஒரே நாளில் '6 கோடிக்கு' அதிபதியான ஏழை இளைஞர்!

தாய்லாந்தின் Nakhon Si Thammarat மாகாணத்தில் அமைந்துள்ள கடற்கரையில், சில தினங்களுக்கு முன் Hatchai Niyomdecha என்ற நபர் தனது குடும்பத்தினர் சிலருடன் கடல் சங்குகளை சேகரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவர்கள் கைவிடப்பட்ட மிதவை ஒன்று கரையோரம் கிடப்பதைக் கண்டுள்ளனர். அதனை எடுத்து பார்த்த போது, அதற்குள் மூன்று நத்தை ஓடுகள் இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த நத்தை ஓடுகளை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதனை Hatchai, தனது தந்தையிடம் கொடுத்த நிலையில், அவர் அந்த ஓடுகளை சுத்தம் செய்த போது, அதனுள்ளே melo எனப்படும் அரிய வகை ஆரஞ்சு முத்து ஒன்று இருந்துள்ளது. இந்த அரிய வகை முத்து, கடல் நத்தைகளால் உருவாக்கப்பட்டு ஓடுகளில் வைக்கப்படுகின்றன. அதன் எடை சுமார் 7 கிராமிற்கு மேல் இருந்த நிலையில், அது விலையுயர்ந்த முத்து தானா என்பதை சோதித்தும் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, Hatchai கூறுகையில், 'சில தினங்களுக்கு முன் நான் விசித்திர கனவு ஒன்றை கண்டேன். அந்த கனவில் நீண்ட மீசையுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும் முதியவர் ஒருவர் தோன்றி, என்னை கடற்கரைக்கு வரச் சொன்னார். இதனால் எனக்கு ஒரு பரிசு கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அந்த முதியவரை எங்களின் வறுமையைப் போக்க வந்த கடவுளாகத் தான் நான் பார்க்கிறேன்.

இந்த முத்தை நான் அதிக விலைக்கு விற்க விரும்புகிறேன். பணம் என் வாழ்க்கையை மாற்றாது. ஆனால், என் விதியை மாற்றி விடும் என நம்புகிறேன். எனது மொத்த குடும்பமும் சிறந்த வாழ்க்கையை இதனால் பெறும்' என கூறியுள்ளார். இந்த ஆரஞ்சு முத்தின் மதிப்பு, இந்திய மதிப்பில் சுமார் 6 கோடிக்கு மேலாகும்.

இவர்களுக்கு இப்படி ஒரு முத்து கிடைத்திருப்பதை அறிந்த செல்வந்தர் ஒருவர், அதனைக் குறிப்பிட்ட விலைக்கு வாங்க முன் வந்துள்ளார். ஆனால், Hatchai-வின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இன்னும் அதிக விலைக்கு அதனை விற்க முடியும் என அந்த குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்