"'30' வருஷமா ஒண்ணா 'சந்தோஷமா' வாழ்ந்தாங்க... இப்போ 'மரணத்தால' கூட அவங்கள 'பிரிக்க' முடியல..." மனதை சுக்கு நூறாக்கிய 'துயரம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்டெக்சாஸ் (Texas) பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது மரணத்திலும் இணைந்தே விடைபெற்றுள்ளனர்.
டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் பால் ப்ளேக்வெல். இவரது மனைவி பெயர் ரோஸ்மேரி ப்ளேக்வெல். இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இருவரும் இணைந்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் இருவரும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டி இருவரும் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருவரது உடலிலும் முன்னேற்றம் இல்லாததால் கடந்த இரு வாரங்களாக பால் மற்றும் மேரி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் மூலம் சிகிட்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்கள் இனிமேல் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் பால் - ரோஸ்மேரி தம்பதியரின் மகன்களிடம் தெரிவித்துள்ளனர்.
'மருத்துவர்கள் எங்கள் பெற்றோர்களின் உடலில் பெரிதாக முன்னேற்றமில்லை என தெரிவித்ததும் நாங்கள் மிகவும் கடினமான முடிவு ஒன்றுக்கு வந்தோம். எந்தவித கஷ்டமும் இல்லாமல் அவர்கள் இறப்பில் ஒன்றாக செல்லட்டும் என மனதை கல்லாக்கிக் கொண்டு முடிவு செய்தோம். அதன்படி, எனது பெற்றோர்கள் ஒன்றாக கையை பிடித்தபடி இருந்தார்கள். அதனுடன் நானும் எனது சகோதரரும், பெற்றோர்களின் கைகளை இணைத்துக் கொண்டோம்.
நாங்கள் நான்கு பேரும் கைகளை இணைத்த படி இருந்த போது, வென்டிலேட்டர் இணைப்பில் இருந்து இருவரும் துண்டிக்கப்பட்டனர்' என பால் - மேரி தம்பதியின் மகன் ஷான் ப்ளேக்வெல் தெரிவித்துள்ளார். 30 வருடங்களாக இணைந்து வாழ்ந்த தம்பதியர், மரணத்திலும் அடுத்தடுத்து இணைந்தே சென்றது அனைவரின் மனதை உருக்குவதாக உள்ளது.
மற்ற செய்திகள்