Maha mobile
Nadhi

"அது பக்கத்துல போனா ஒரு செகண்ட்ல நம்ம கதை முடிஞ்சிடும்".. செங்கடலில் இருக்கும் ஆபத்தான பகுதி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செங்கடலில் வித்தியாசமான பள்ளம் ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, உயிரினங்களுக்கு மிகுந்த ஆபத்தானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

"அது பக்கத்துல போனா ஒரு செகண்ட்ல நம்ம கதை முடிஞ்சிடும்".. செங்கடலில் இருக்கும் ஆபத்தான பகுதி.. அதிர வைக்கும் ரிப்போர்ட்..!

Also Read | "இந்த தருணத்துக்காக பல வருஷம் காத்திருந்தேன்".. அம்மா, அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

உலகின் பெரும்பான்மையான பகுதிகள் கடல் நீரால் சூழப்பட்டுள்ளன. ஆதிகாலம் தொட்டே கடல் குறித்த பல்வேறு ஆரய்ச்சிகளை மனிதர்கள் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இருப்பினும், இந்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு வாழிடமாக இருக்கும் கடல், மனிதர்களுக்கு எப்போதும் புரியாத புதிராகவே இருந்துள்ளது. அந்த நெடிய பட்டியலில் இணைந்திருக்கிறது செங்கடலில் உள்ள 'மரண குளம்'.

ஆப்பிரிக்காவுக்கு ஆசியாவுக்கும் இடையே இந்திய பெருங்கடலின் நுழைவு வாயிலில் அமைந்திருக்கிறது செங்கடல். இங்கே அமெரிக்காவை சேர்ந்த கடல்சார் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் உள்ளே ஆழமான இடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Terrifying death pool found at bottom of the Red sea

ஆய்வு

செங்கடலில் அமைந்திருக்கும் இந்த குளம் 10 அடி நீளமும் 1,770 மீட்டர் ஆழமும் கொண்டதாகும். இதனுள் வழக்கத்துக்கு மாறாக உப்பின் அடர்த்தி மிக அதிக அளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக நிபுணர்கள் நடத்திய ஆராய்ச்சியில் தான் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த பகுதியை Deathpool எனப் பெயரிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். இதனுள் ஆழ்கடல் ரோபோ ஒன்றினை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த மரண குளத்திற்குள் நுழையும் எந்த உயிரினமும் சில வினாடிகளில் மரணமடைந்துவிடும் என் எச்சரித்திருக்கிறார்கள் நிபுணர்கள். முக்கியமாக, இதன் உள்ளே ஆக்சிஜன் துளி அளவும் இல்லாதது உயிரினங்களே வசிக்க முடியாத பகுதியாக இதனை மாற்றியிருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கடல்கள்

இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள்,"இத்தகைய கடல் ஆழத்தின் அடிப்படுகையில் பொதுவாக அதிக உயிரினங்கள் வசிப்பது இல்லை. கடல் வாழ் உயிரினங்களுக்கு இது கெட்ட செய்தியாக இருந்தாலும், பல்லுயிர்களுக்கு இது வளம் நிறைந்தவையாக உள்ளது. இதில் கிடைக்கும் தரவுகள் வரும் காலத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக கடல் எவ்வாறு உருவாகின என்பதை கண்டறிய உதவும்" என்றனர்.

Terrifying death pool found at bottom of the Red sea

மேலும், பூமியில் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற இடங்களிலும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆகவே இந்த பகுதியிலும் அப்படி நுண்ணுயிர்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சியை தொடர இருப்பதாகவும் ஆராச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

Also Read | இலங்கையின் புதிய பிரதமர் ஆனார் ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தன.. முழு விபரம்..!

POOL, TERRIFYING DEATH POOL, RED SEA

மற்ற செய்திகள்