'பண்ணை வேலைன்னு சொல்லி பாலைவனத்துல வெச்சு அடிக்குறாங்க.. சோறுதண்ணி இல்ல'.. உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தெலுங்கானாவின் ராஞ்சனா ஸ்ரீசில்லா மாவட்டத்தின் இலந்தகுண்டாவைச் சேர்ந்தவர் சமீர்.

'பண்ணை வேலைன்னு சொல்லி பாலைவனத்துல வெச்சு அடிக்குறாங்க.. சோறுதண்ணி இல்ல'.. உருக்கும் வீடியோ!

21 வயதேயான இவருக்கு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வேலை வாங்கித் தருவதாக இந்திய மதிப்பில் 22 ஆயிரம் ரூபாய்க்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 80 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏஜெண்ட் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்.

கடைசியாக விசா, விமான டிக்கெட்டுகள் எல்லாம் வந்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி சவுதிக்குச் சென்ற சமீருக்கு கிடைத்ததோ பேரதிர்ச்சி. அதன் விளைவாக அவர் ஒரு வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதை அடுத்து, அந்த வீடியோ இந்தியாவை பதைபதைக்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில், சமீர், தன்னை பண்ணை வேலை என்று கூறி அழைத்துவந்து, ஆனால் பாலைவனத்தில் ஆடுமேய்க்கச் சொல்வதாகவும், சுமார் 20 நாட்களாக சோறு, தண்ணீர் தரப்படாமல் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், தன்னைத் தவிர அங்கு யாருமே இல்லை என்றும், தன்னைக் காப்பாற்றும்படியும் கெஞ்சுகிறார். தான் செத்தாலும் அங்கிருக்கும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்று கூறிய சமீர், தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும்படியும் அழுகிறார்.

இந்த வீடியோவைக் கவனித்த தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ஆர், சவுதி அரேபியாவின், இந்திய தூதர்ப் அவுசத் சயீத்திடம் உதவி கேட்டு, ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

SAD, TELANGANA, MAN, JOB, HEARTBREAKING