'சிறுநீர் கழித்த பின் வந்த வலி'... 'மருத்துவமனைக்கு ஓடிய இளைஞர்'... 'ஷாக்காகி நின்ற மருத்துவர்கள்'... வாழ்க்கையையே அடியோடு மாற்றிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சிறுநீர் கழித்த பின்னர் வந்த வலியால் மருத்துவமனைக்குச் சென்ற இளைஞரின் வாழ்க்கை அடியோடு மாறிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மைக்கி சானல். இவருக்குச் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் அவ்வப்போது வலி வந்துள்ளது. ஆனால் அதை எல்லாம் அவர் பெருத்துப்படுத்தாமல் இருந்த நிலையில், ஒரு கட்டடத்தில் வலி அதிகமாக உடனே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்களும் ஏதாவது ஓவ்வாமையாகோ அல்லது ஏதாவது கல் இருக்கலாம் எனப் பரிசோதனை செய்து பார்த்துள்ளார்கள்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களாலே நம்ப முடியாமல் போனது. மைக்கிக்கு நடந்த சோதனையில், அவரது வயிற்றிற்குள் கருப்பை, எனப் பெண்ணிற்கான அனைத்து இனப்பெருக்க உறுப்புகளும் இருந்துள்ளது. இந்த ஆச்சரியமான விஷயத்தை மைக்கி சானலிடம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், மைக்கி மருத்துவர்கள் தன்னிடம் விளையாடுவதாக நினைத்து அதை நம்பாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை அவரிடம் காட்டியுள்ளார்கள். ஆனால் அதற்குப் பிறகு தான் முக்கிய திருப்பமே நடந்தது. மருத்துவர்கள் மைக்கி சானலிடம் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் அவர், நான் ஆணாக இருந்தாலும், அவ்வப்போது எனது மனதில் தான் ஒரு பெண்ணாக இருப்பேனோ என்ற எண்ணம் வந்து சென்றிருக்கிறது. எனவே எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
பெண்ணாக இருப்பது ஒரு வரம் என கூறிய மைக்கி சானல், எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், தற்போது என்னால் கூட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்ள மைக்கி சானல் முடிவு செய்தார். அதன்படி செயற்கை கருவூட்டல் முறையில் மைக்கி சானல் கர்ப்பமடைந்தார். இருப்பினும் அவருக்குப் பெண்ணுறுப்பு இல்லாத காரணத்தினால் சிசேரியன் முறையில் தான் குழந்தை பிறக்கும்.
தான் பெண்ணாக மாறியதில் முழுமை அடைந்துள்ளதாகக் கூறியுள்ள மைக்கி, பெண்ணாக இருப்பது எவ்வளவு சிறப்பானது என்பதை தற்போது உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்