‘ரொம்ப நாளா ஐபோன் வாங்கணும்னு ஆசை’!.. ஆன்லைனில் ஆர்டர் செய்த இளைஞர்.. கடைசியில் காத்திருந்த மாபெரும் ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆன்லைனில் வந்த போலியான விளம்பரத்தைப் பார்த்து ஐபோன் வாங்கிய இளைஞர் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ள சம்பவம் தாய்லந்தில் நடைபெற்றுள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் விற்பனை வலைதளம் ஒன்றில் ஐபோன்கள் மலிவான விலையில் தருவதாக இருந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த அந்த இளைஞர், உடனே அந்த வலைதளத்தில் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரின் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலைப் பார்த்த அந்த இளைஞர் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு, அவர் உயரத்தில் ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால் குழப்பத்திலேயே பார்சலை பிரித்துள்ளார். அப்போது அதற்குள் ஒரு டேபிள் இருந்துள்ளது. அந்த டேபிளானது ஐபோன் வடிவத்தில் வடிமைக்கப்பட்டுள்ளது.
Creo que salió ganando 👉🏼 Teen Buys Cheap iPhone Online, Gets iPhone-Shaped Coffee Table Instead https://t.co/mDNHjOwoMj pic.twitter.com/n3CgBPYSBW
— roc21 (@roc21) March 24, 2021
துரதிர்ஷ்டவசமாக ஆர்டர் செய்வதற்கு முன்பு அதன் தயாரிப்பு விவரங்களை அந்த இளைஞர் காண தவறிவிட்டார். தற்போது தனது தவறை எண்ணி வருத்தப்படும் அவர், தனது சமூக வலைதள பக்கங்களில் இதுகுறித்து விளக்கியுள்ளார். மேலும், அந்த ஐபோன் டேபிள் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். செல்போன் மலிவானது என்பதை பார்த்து தான் ஏமர்ந்துவிட்டதாகவும், இதுபோல யாரும் செய்யாதீர்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்