Thalaivi Other pages success

'769 நாள் லீவு'... 'ஆனா 84 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய கில்லாடி கணக்கு வாத்தியார்'... 'லீவுக்காக சொன்ன பொய்தான் அல்டிமேட்'... எப்படிங்க, ட்விஸ்டை பார்த்து அரண்டுபோன நிர்வாகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பணிக்கே செல்லாமல் ஒருவர் இரண்டு நிறுவனங்களில் சம்பளம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'769 நாள் லீவு'... 'ஆனா 84 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய கில்லாடி கணக்கு வாத்தியார்'... 'லீவுக்காக சொன்ன பொய்தான் அல்டிமேட்'... எப்படிங்க, ட்விஸ்டை பார்த்து அரண்டுபோன நிர்வாகம்!

தான் பணியாற்றி வரும் பள்ளியில் பல்வேறு காரணங்களைக் கூறி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சம்பளத்தையும், இதர பலன்களையும் வாங்கிக் கொண்ட ஆசிரியர், வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து 84 லட்சம் ரூபாய் சம்பாதித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Teacher Spent 769 Days Off Work While Secretly Doing Another Job

கணித ஆசிரியராக பணியாற்றி வரும் அந்த நபர் கடந்த 3 ஆண்டுகளில் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளார். மூன்று ஆண்டுகளைச் சேர்த்தால் மொத்தம் 1095 நாட்கள் உள்ளது. இதில் சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் 312 நாட்கள் வருகிறது. இது தவிர்த்து பொது விடுமுறைகள் என்று கணக்கிட்டால் அதற்கென்று தனி லிஸ்ட் உள்ளது.

பள்ளியில் தான் பார்த்து வந்த கணக்கு ஆசிரியர் பணியிலிருந்து 769 நாட்கள் லீவு என்றால் கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த ஆசிரியர் ஒரு நாள் கூட பணிக்குச் சென்றது கிடையாது. அந்த ஆசிரியர் சிசிலி மாகாணத்தில் உள்ள பொர்டெனோன் எனும் பகுதியில் உள்ள இஸ்டிடூடோ டெக்னிகோ எனும் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

Teacher Spent 769 Days Off Work While Secretly Doing Another Job

தனது உடல் நிலை சரியில்லை எனவும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள ஆள் இல்லை என பல்வேறு காரணங்களைக் கூறி அவர் சுமார் மூன்று ஆண்டுக்காலம் விடுமுறை எடுத்து வந்திருக்கிறார். தனது பொய்யை நிரூபிக்க அவ்வப்போது மருத்துவ சான்றிதழ்களையும் அவர் சமர்ப்பித்து வந்திருக்கிறார். இதனால் தவறாமல் அந்த ஆசிரியருக்குச் சம்பளம் வந்ததோடு, குழந்தைகளின் மருத்துவச் செலவு என ஒரு தொகையை அந்த பள்ளியிலிருந்து பெற்று வந்துள்ளார்.

ஆனால் அந்த ஆசிரியரின் செயலால் சந்தேகமடைந்த சக ஆசிரியர்கள், உண்மையைக் கண்டறிய காவல்துறையின் துணையை நாடினார்கள். அப்போது தான் அந்த ஆசிரியர் சொன்ன மொத்த பொய்யும் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த ஆசிரியர் தான் பணியாற்றி வரும் பள்ளியில் பொய் காரணங்களைக் கூறிக் கொண்டே, நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வேறு சில இடங்களில் கன்சல்டண்டாக பணியாற்றி சுமார் 84 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது தெரிய வந்தது.

Teacher Spent 769 Days Off Work While Secretly Doing Another Job

போலீசார் அந்த ஆசிரியர் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்த நாட்களில் அவருடைய நடமாட்டங்களைக் கண்காணித்த போது அவர் பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. அவருடைய ஓட்டல் புக்கிங்குகள், சுங்கச்சாவடி கட்டணங்கள் வாயிலாக அவரின் நடமாட்டத்தை உறுதி செய்துகொண்டனர். பல்வேறு நிறுவனங்களில் அவர் 97,000 யூரோக்களை (84 லட்ச ரூபாய்) சம்பாதித்திருப்பது தெரியவந்தது.

இது தவிரத் தான் பணிக்கே செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த பள்ளியில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் வாயிலாகவும் 13,000 யூரோக்கள் (11 லட்சம்) ஏமாற்றி வாங்கியதும் தெரிய வந்தது.

மற்ற செய்திகள்