இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

2.யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதால், வரும் 22ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த விவரங்களை விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துரைக்குமாறு கூறி உயர்நீதிமன்றம்  தூக்கு தண்டனை  நிறைவேற்றுவதற்காக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

4. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அறிவித்ததை விட அரை மணி நேரம் கூடுதலாக நடத்தப்பட்டு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 72 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

5. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

6. களியக்காவிளை காவலர் கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ள தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுடைய தீவிரவாத அமைப்பில் 3 பேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

7. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

8. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு எழுவது ஒரு சவாலே என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒப்புக்கொண்டுள்ளார்.

9. ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 4 இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10. சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்திற்குள் பேருந்து தலை குப்புற கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

13. நன்றியை தெரிவிக்கும் வகையில் முல்லை பெரியார் அணையை கட்டிய கர்னல் பென்னிகுயிக் பிறந்தநாளை பொங்கல் வைத்து வெகு விமர்சையாக உசிலம்பட்டி விவசாயிகள் கொண்டாடியுள்ளனர்.