இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில்  இதுவரை 2,547 பேர் குணமடைந்துள்ள நிலையில், 543 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

2. தமிழகத்தில் இன்று புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1520 ஆக உயர்ந்துள்ளது. 

3. இந்தியாவில் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

4. கேரளாவில் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மத்திய அரசின் வழிமுறைகளை மீறும்படி இருப்பதாக மத்திய அரசு கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து லாக் டவுனை நீர்த்துப்போகச் செய்யவில்லை எனவும், இது தவறான புரிதல் எனவும் மத்திய அரசுக்கு கேரளா பதிலளித்துள்ளது.

5. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மே 7ஆம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

6. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு மே 3ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

7. தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

8. மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளித்தால் அவர்களுக்கு அதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைசசகம் எச்சரித்துள்ளது.

9. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வரும் மே 3ஆம் தேதி வரை அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

10. கொரோனா முதல்முதலாக பரவத் தொடங்கிய சீனாவின் வுஹான் நகரம் ஆபத்து குறைந்த பகுதியாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

11. இலங்கையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது ஆபத்தானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

12. நைஜீரியா நாட்டில் கிராமங்கள் மீது கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

13. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.