1. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்து, வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்கிக்கொள்ள வேண்டும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
3. காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டுவருவதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இன்று 12 வயதுக்குட்பட்ட 8 குழந்தை, சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
5. பஞ்சாப்பில் மேலும் இரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
6. தமிழகத்தில் மேலும் 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
7. வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, சேலம், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய 5 மாநகராட்சிகளில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9. சென்னையில் கொரோனோ பரிசோதனையை 2 ஆயிரம் வரை அதிகரித்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்து உள்ளார்.
10. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11. காய்ச்சல், இருமல் போன்றவை மட்டுமே கொரோனாவுக்கான அறிகுறிகள் அல்ல என்றும் தசைவலி, தலைவலி, தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம், நுகரும் ஆற்றல் இழப்பு, தொடர் நெஞ்சுவலி, கடுமையான குளிர் அதனுடன் உடல் நடுக்கம் ஆகியவையும் கொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.