1. சென்னையில் இன்று மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டுவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
5. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,07,094 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,82,552 ஆகவும் உள்ளது.
6. எம்.எஸ்.தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உயர்ந்துக்கொண்டே சென்றாலும் தன்னுடனான நட்பை இப்போதும் மறக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார்.
7. கோயம்பேடு சந்தை மூலம் மேலும் 4 பேருக்கு கொரோனா பரவினால் சந்தையை மூட வேண்டிவரும் என்றும், ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார்.
8. தமிழ்நாடு அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்களும் திருப்பி அனுப்பப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.
9. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
10. செல்போன் உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்கள் அல்லாதவற்றையும் விற்க அனுமதி வேண்டும் என மத்திய அரசுக்கு அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.