Veetla Vishesham Mob Others Page USA

சவூதியில் மரணமடைந்த தமிழர்.. கவலையில் இருந்த குடும்பத்துக்கு 30 நாளுக்கு அப்பறம் வந்த அடுத்த ஷாக் நியூஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சவூதி அரேபியாவில் மரணமடைந்த தமிழர் ஒருவர் அங்கேயே புதைக்கப்பட்டதையடுத்து, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

சவூதியில் மரணமடைந்த தமிழர்.. கவலையில் இருந்த குடும்பத்துக்கு 30 நாளுக்கு அப்பறம் வந்த அடுத்த ஷாக் நியூஸ்..!

Also Read | "11 ஆயிரம் பேர் தங்கலாம்.. 20 ஆயிரம் டன் வெயிட்டு".. பயன்பாட்டுக்கு வரும் முன்பே சல்லி சல்லியாய் உடைக்கப்பட இருக்கும் பிரம்மாண்ட சொகுசு கப்பல்.!

மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகேயுள்ள தொப்புலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி். மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்துவந்த ஆண்டிச்சாமி கடந்த ஏப்ரல் மாதத்தில் சவூதி அரேபியா சென்றிருக்கிறார். அங்கே தனியார் நிறுவனம் ஒன்றில் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ஆண்டிச்சாமி. இந்நிலையில் கடந்த மே 19 ஆம் தேதி, தனது அறையில் இருந்த ஆண்டிச்சாமி மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார். இதனையடுத்து, அவருடன் தங்கியிருந்தவர்கள் ஆண்டிச்சாமியின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

கோரிக்கை

கணவர் இறந்ததால் அதிர்ச்சியடைந்த ஆண்டிச்சாமியின் மனைவி வேடச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், சவூதி அரேபியாவில் மரணமடைந்த தனது கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் வேடச்சி. இதனிடையே ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இமெயில் மூலமாக உறவினரான சின்ன மூக்கையன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய தூதரகம் மூலமாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு பதில் அளித்த அந்நிறுவனம், ஆண்டிச்சாமியின் உடலை இந்தியா அனுப்புவதாக தெரிவித்திருந்தது.

Tamil expatriate died in Saudi Arabia buried there

30 நாள் போராட்டம்

சவூதியில் மரணமடைந்த ஆண்டிச்சாமியின் உடலை அவர் பணிபுரிந்துவந்த நிறுவனம் இந்தியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்திருந்தாலும், கடந்த 30 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆண்டிச்சாமியின் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் இந்திய தூதரகத்திற்கும், அந்நிறுவனத்திற்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதற்கு பதில் அளித்துள்ள நிறுவனம், இந்திய தூதரகத்தின் அனுமதியுடன் ஆண்டிச்சாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறது. இதனை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளதுடன் , ஆண்டிச்சாமியின் உடலை உடனே சொந்த ஊருக்கு அனுப்பவேண்டும் என நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த ஆண்டிச்சாமியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தனது கணவரின் உடலை கொண்டுவர அரசு உதவவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சவூதியில் மரணமடைந்த தமிழரின் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டதாக அவர் பணிபுரிந்துவந்த நிறுவனம் தெரிவித்திருப்பதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Also Read | "அதுங்க குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி"..எல்லா வீட்டுலயும் நல்ல பாம்பு.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?

EXPATRIATE, SAUDI ARABIA

மற்ற செய்திகள்