இந்த 'ரண' களத்துலையும் ஒரு கிளுகிளுப்பு...! 'ஒரு கையில துப்பாக்கி...' 'மறு கையில குழந்தைங்க...' எல்லாரும் சேர்ந்து 'எங்க' கிளம்பிட்டாங்க...? - வைரலாகும் புகைப்படங்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் துப்பாக்கிகளுடன் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இந்த 'ரண' களத்துலையும் ஒரு கிளுகிளுப்பு...! 'ஒரு கையில துப்பாக்கி...' 'மறு கையில குழந்தைங்க...' எல்லாரும் சேர்ந்து 'எங்க' கிளம்பிட்டாங்க...? - வைரலாகும் புகைப்படங்கள்...!

அமெரிக்க ராணுவப்படைகள் 20 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், தாலிபான்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார்.

Taliban with guns mingle with families at Kabul zoo and viral pics

சுமார் 20 ஆண்டுகள் தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவராக இருக்கும் முல்லா அகுந்த் தலைமையில் தான் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தற்காலிக அரசை  அமைக்கவுள்ளனர்.

மேலும், தாலிபான் படைக்கு பல ஆண்டுகள் உழைத்த நபர்களையே தாலிபான் ஆட்சி பொறுப்பில் நியமித்துள்ளது. தாலிபன்கள் ஆப்கானை கைப்பற்றி ஒரு மாதம் ஆன போதும் அங்கு தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Taliban with guns mingle with families at Kabul zoo and viral pics

யுனிசெப் அளித்துள்ள அறிக்கையின் படி, அடிப்படை தேவைகளான உணவு, மருந்து, குடிநர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

தாலிபான்கள் பொதுவாகவே உலக விஷயங்களை அறியாதவர்கள். ஏதாவது கிராமப்பகுதிகளிலேயே பதுங்கி, பயிற்சி எடுத்து தங்கள் படைகளுக்கு உழைப்பவர்கள். தாலிபான் படையினர் ஆப்கானை கைப்பற்றிய முதல் நாள் நகர பகுதிக்கு வந்த போது அங்கிருக்கும் உடற்பயிற்சி செய்யும் இடங்களுக்கு சென்று விளையாடிய வீடியோ வைரலாகியது.

Taliban with guns mingle with families at Kabul zoo and viral pics

அதுமட்டுமல்லாமல், நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடுவது, பூங்காக்களில் குழந்தைகளின் காரை ஓட்டுவது போன்ற செயல்களை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது தாலிபான் அமைப்பை சேர்ந்த வீரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் காபூல் உயிரியல் பூங்காவுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Taliban with guns mingle with families at Kabul zoo and viral pics

அதில், தாலிபான்கள் தங்கள் தோளில் துப்பாக்கியுடனும், மறுபக்கம் தங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காண்பித்து மகிழ்கின்றனர். அவர்கள் சென்ற பிக்னிக் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Taliban with guns mingle with families at Kabul zoo and viral pics

இந்த இன்ப சுற்றுலாவில் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் 40 வயது அப்துல் காதிர் தனது நண்பர்களுடன் பிக்னிக் சென்றுள்ளார். தங்கள் அனுபவம் குறித்து அவர் கூறுகையில், 'எனக்கு விலங்குகளை ரொம்ப பிடிக்கும். அதுவும் குறிப்பாக சிங்கங்கள் என்றால் உயிர். எனக்கு இங்கு வந்தது புதுவித அனுபவத்தை தருகிறது' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்