'இந்த பருப்பு எங்க கிட்ட வேகாது'...'உங்களுக்கு டெட்லைன் ஆகஸ்ட் 31'... அமெரிக்காவுக்கு முதல் அடியை கொடுத்த 'தாலிபான்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்இதுவரை அமெரிக்கா குறித்து எதுவும் பேசாத தாலிபான்கள் முதல் முறையாக அந்த நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும் முடிவை அமெரிக்கா எடுத்த நேரத்திலிருந்து அங்குத் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
கையேடு அங்கு ஆட்சி அமைக்கும் பணிகளில் தாலிபான்கள் வேகமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள தத்தம் நாட்டவரை மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா எனப் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. காபூல் விமானநிலையம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என மேற்கத்திய நாடுகளின் படைகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் விரைவில் அவர்கள் தங்கள் நாட்டவரை வெளியேற்றிவிட்டு நாட்டைவிட்டு முழுமையாக வெளியேறுமாறு தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமெரிக்க, பிரிட்டன் படையினர் மீட்புப் பணிகள் பெயரில் இன்னும் கொஞ்சம் நாள் ஆப்கானில் இருக்க எடுக்கும் முயற்சியை நாங்கள் அறிவோம். தாலிபான்களைப் பொறுத்தவரை இது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும்.
சொன்னபடி திரும்பச் செல்லவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும். தாலிபான்கள் எதற்கும் தயாரானவர்கள்'' என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்துப் படைகளும் வெளியேறிவிடும் இன்று ஏற்கெனவே மேற்கத்திய நாடுகள் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மேலும் நீட்டிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை அமெரிக்கா குறித்து எதுவும் பேசாத தாலிபான்கள் முதல் முறையாக அமெரிக்காவுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்