'ஆப்கான் எப்படி இருக்க போகுதோ'... 'ஜீன்ஸ்க்கு வாய்ப்பே இல்ல'... 'But பெண்கள் இத கண்டிப்பா Follow பண்ணணும்'... தாலிபான்கள் அதிரடி!
முகப்பு > செய்திகள் > உலகம்இனிமேல் ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை எப்படி இருக்க போகிறதோ என்பதே உலக நாடுகளின் கவலையாக உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆக்கிரமிப்பால் அரசு கவிழ்ந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தாலிபான்களுக்குப் பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஆப்கானிஸ்தானில் இனிமேல் பெண்கள் உரிமை என்பது எழுத்தளவில் கூட இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெண்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது, நிறுவனங்களில் பணிபுரியக் கூடாது என ஏற்கனவே தாலிபான்கள் கடுமையாகக் கூறியுள்ளார்கள்.
ஆண்கள் கூட ஜீன்ஸ் அணியக் கூடாது, ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய உடையைத் தான் அணிய வேண்டும் எனத் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதற்கிடையே பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாகப் பேசிய தாலிபான்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ''பெண்கள் உரிமைகளை மதிக்கச் சபதம் எடுப்போம்.
அவர்கள் கல்வி கற்கத் தடையில்லை. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்படும் எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பெண்கள் எந்த வகை பர்தா வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்