என்னங்க மாத்தி மாத்தி பேசுறாங்க.. திடீரென ‘அந்தர் பல்டி’ அடித்த தாலிபான்.. ‘மெல்ல வெளிவரும் சுயரூபம்’.. மறைமுகமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை..?
முகப்பு > செய்திகள் > உலகம்காஷ்மீர் விவகாரத்தில் தாலிபான்கள் திடீரென அந்தர் பல்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து உலக நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. தாலிபான்கள் பாகிஸ்தானை தங்களது இரண்டாவது நாடு எனக் கூறியுள்ளனர். அதனால் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தாலிபான்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என அஞ்சப்பட்டது.
அப்போது நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்த தாலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்றும், இந்தியாவுடன் சுமூகமான உறவையே விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பை பலப்படுத்துவதில் அக்கறையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே தாலிபான்களின் வேண்டுகோளை ஏற்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில், தாலிபான்களுடன் இந்தியா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஆப்கானை தீவரவாதத்துக்கான இடமாகவும், இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது என இந்தியா கூறியது.
இந்த நிலையில் பிபிசி சேனலுக்கு பேட்டியளித்த தாலிபான் அரசியல் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாகீன், ‘காஷ்மீர் அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க தாலிபான்களுக்கு உரிமை உள்ளது. அதேவேளையில் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராடும் கொள்கை எங்களுக்கு கிடையாது’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் சுமூகமான உறவை விரும்புவதாக தாலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி கூறியுள்ள நிலையில், அதற்கு முரணாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாகீன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்