ஒருவழியா 'மீட்டிங்' நடந்துடுச்சு...! தாலிபான்களிடம் இந்திய தூதர் 'என்ன' பேசினார்...? - வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் ஆட்சியிலும் இந்தியா முன்பு இருந்ததை போன்று நல்ல நட்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து வெளியேற்றி வருகிறது. தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் வெளிப்பாடே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் வெளியேறுவதற்கு காரணம்.
உலகநாடுகளின் மத்தியில் இந்தியா தாலிபான்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கி வருகிறது. இதற்கு காரணம் தாலிபான் பாகிஸ்தானை நட்பு நாடாக கருதுகிறது. இதற்கு முன்னதான ஆட்சியில் ஆப்கானிஸ்தானும் இந்தியாவும் நட்பாக இருந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்தியா பல்வேறு திட்டங்களையும் மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் தாலிபான் பிரதிநிதியை இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்துப் பேசியுள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இந்திய தூதர் வலியுறுத்தியதாகவும், அதற்கு தாலிபான் உத்தரவாதம் அளித்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளோ, பயங்கரவாத செயல்களோ எந்த வகையிலும் நடைபெறக் கூடாது என இந்திய தூதர் குறிப்பிட்டதாகவும், இந்த விவகாரங்களுக்கு நேர்மறையான முறையில் தீர்வு காணப்படும் என்றும் தாலிபான் பிரதிநிதி கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், கட்டாரில் உள்ள தாலிபான் துணைத் தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் இந்தியாவை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஆப்கானிஸ்தான் நாட்டை பொறுத்தமட்டில், இந்தியா மிக முக்கிய நாடு. ஆப்கானிஸ்தானில் தாலிபானின் புதிய ஆட்சி அமைந்தவுடன், இந்திய நாட்டுடன் உறவை மேம்படுத்துவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை இந்தியாவுடன் முன்பு போன்றே இருக்க வேண்டும் என விரும்புகிறோம்' என குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்