'தாலிபான்களுக்கு 'இது' மட்டும் கிடைத்துச்சுதுனா... உலகமே அழியும் அபாயம்'!.. அமெரிக்காவுக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானுடன் தாலிபான்கள் நட்புறவு கொண்டிருப்பதால், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை தாலிபான்கள் கைப்பற்றும் அபாயம் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

'தாலிபான்களுக்கு 'இது' மட்டும் கிடைத்துச்சுதுனா... உலகமே அழியும் அபாயம்'!.. அமெரிக்காவுக்கு கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

தாலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்க படைகள் வரும் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் உலக நாடுகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளன. அந்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அந்நாட்டில் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, தாலிபான்கள் பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை சீர்குலைத்து, இம்ரான்கான் ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். ஒரு வேலை அவ்வாறு நிகழ்ந்தால், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை தாலிபான்கள் கைப்பற்றும் மிகவும் ஆபத்தான நிலை உருவாகலாம்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் பாகிஸ்தானை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை தாலிபான்கள் கைப்பற்றாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜோ பைடனிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்