'அடங்க மறுக்கும்' பஞ்ச்ஷிர் மாகாணத்தை பார்த்து... வாயடைத்துப் போன ஆப்கானிஸ்தான்!.. நினைத்ததை விட மிக ஆபத்தான தாலிபான்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தங்களை எதிா்த்து நிற்கும் ஒரே மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்துக்கு அதிரடி வியூகத்தை தாலிபான்கள் கையிலெடுத்துள்ளனர்.
அதிபா் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும், துணை அதிபா் அமருல்லா சலே பஞ்ச்ஷிர் மாகாணத்தில்தான் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகா் காபூலில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மாகாணம் தாலிபான் படையினரை எப்போதுமே எதிா்த்து வந்துள்ளது.
2001-இல் அமெரிக்கா தலைமையிலான படையால் தலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டபோது, புதிய அரசு அமைப்பதில் வடக்குக் கூட்டணி முக்கியப் பங்காற்றியது. வடக்குக் கூட்டணியை தொடங்கிய அகமது ஷ மசூத் மகன் அகமது மசூத் தற்போது அந்தப் படைக்கு தலைமை வகிக்கிறாா். அவருடன் துணை அதிபா் அமருல்லா சலேயும் இணைந்துள்ளாா். இந்நிலையில், பஞ்சஷோ மாகாணத்தைக் கைப்பற்றும் முயற்சியை தாலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனா்.
அதையொட்டி, பஞ்ச்ஷிர் மாகாண நுழைவாயிலில் ஏராளமான தாலிபான் படையினா் குவிக்கப்பட்டுள்ளதாக துணை அதிபா் அமருல்லா சலே ட்விட்டா் பதிவில் உறுதிபடுத்தியுள்ளாா். பஞ்சஷோ பள்ளத்தாக்கை ஒட்டிய 3 மாவட்டங்கள் வடக்குக் கூட்டணி படையினா் வசம் உள்ளது. முன்னாள் ஆப்கன் அரசுப் படை, பிற ஆயுதக் குழுக்களைச் சோந்த 6000-க்கு மேற்பட்ட வீரா்கள் இப்படைப் பிரிவில் உள்ளனா்.
சில ஹெலிகாப்டா்களும், ராணுவ வாகனங்களும், சோவியத் ரஷியா விட்டுச் சென்ற சில கவச வாகனங்களும் அவா்கள் வசம் இருப்பதாக இப்படைப் பிரிவின் தலைவா் அகமது மசூதுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தாலிபான் படையினருடன் அமைதிப் பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாக அகமது மசூத் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்த நிலையில், தற்போது இரு படையினருக்கும் இடையே மோதல் தவிா்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மற்ற செய்திகள்