உங்க 'பொண்ணுங்கள' எங்களுக்கு 'மனைவி' ஆக்குறீங்களா இல்லையா...? 'ரத்தக்கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்...' - தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் மீண்டும் தாலிபான் தாக்குதல் படையினரின் அட்டூழியம் தலையெடுக்க தொடங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வந்த நிலையில், ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, தாலிபான்களின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி, ஆப்கன் பெண்களை தங்களின் வசமாக்கும் முயற்சியில் தாலிபான்கள் இறங்கியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், தாலிபான்கள் போர்க்குற்றம் செய்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு காரணம் தாலிபான்களிடம் சரணடையும் ராணுவ வீரர்களை, காவல்துறையினரை ஈவு இரக்கமின்றி கொலை செய்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் 34 மாகாணங்களில் தற்போது 12 மாகாணங்கள் தாலிபான்கள் வசம் சென்றுள்ளன. அந்நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய நகரம் காந்தகார். அந்த நகரையே தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதோடு தாலிபான் பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே உங்களின் இளம் மகள்களை எங்கள் படை வீரர்களுக்கு மனைவியாக்குங்கள் என்று மிரட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கத்தார் நாட்டில் வைத்து ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான சர்வதேச ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று, ஆப்கானிஸ்தான் சார்பில் மத்தியஸ்தம் பேசும் கத்தாரின் வாயிலாக, தாலிபான்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் பங்கு அளிக்கிறோம் ஆனால், வன்முறையைக் கைவிடுங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கெல்லாம் செவிசாய்க்க தாலிபான்கள் தயார்நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.
மற்ற செய்திகள்