அடுத்த 'வேட்டையும்' முடிச்சாச்சு... ஆப்கானின் 'முக்கிய நகரத்தை' கைப்பற்றிய தாலிபான்கள்...! இனி அடுத்தது தான் 'மெயின்' டார்கெட்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாக்குதலில் தாலிபான்கள் காந்தகாரை கைப்பற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில்அரசு ராணுவத்திற்கும், தாலிபான்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆப்கான் அரசிற்கு அமெரிக்கப்படை உதவி வந்த நிலையில், அமெரிக்கப்படை விலக இருப்பதாக சென்ற ஆட்சியின் போது டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
தற்போது அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஜோ பைடனும் செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்கா படை முழுவதும் ஆப்கானில் இருந்து விலகும் என கூறியிருந்தார்.
சுமார் 20 ஆண்டுகளாக அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் விலகி வரும் சூழலில், ஆப்கானில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (11-08-2021) தாலிபான்கள் இரண்டு மாகாணங்களை கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபுலை கைப்பற்ற அதி தீவிரமாக முன்னேறி வருகின்றன. அதிகபட்சம் மூன்று மாதங்களில் தாலிபான்களின் திட்டம் முடிந்துவிடும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.
மற்ற செய்திகள்