நீ ஒரு பொண்ணு சரியா...? 'உன் இஷ்டத்துக்கு நடக்கலாம்னு நினச்சா...' வாய்ப்பில்ல ராஜா...! - தாலிபான்கள் செய்த 'காரியத்தினால்' நொந்துப்போன பெண் பத்திரிக்கையாளர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டு போரில் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தாலிபான் அமைப்பு ஆப்கான் ஆட்சியை கவிழ்த்தது. அதோடு, இனி இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி தான் ஆப்கான் மக்கள் செயல்பட வேண்டும் என்ற அறிவிக்கப்படாத நிபந்தனை உள்ளது.
பொதுவாகவே தாலிபான்கள் ஆட்சியில் எப்போதும் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த முறை பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்லும் சூழல் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் ஆப்கானில் தனியார் செய்தி நிறுவன தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிபவர் ஷப்னம் தவ்ரான். தாலிபான் ஆப்கானை கைப்பற்றிய அடுத்த நாள் எப்போதும் போல ஷப்னம் தன்னுடைய பணியை செய்வதற்காக அலுவலகம் வந்துள்ளார்.
ஆனால் சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனமோ அவரை தடுத்து நிறுத்தி, இப்போது ஆட்சி மாறியுள்ளது. பெண்கள் வேலைக்கு வர கூடாது, நீ ஒரு பெண், ஒழுங்காக வீட்டுக்கு செல்' எனக் கூறி அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கூறிய ஷப்னம், 'நான் ஆர்டிஏ பாஷ்டோவில் வேலை செய்கிறேன். இது அரசு நடத்தும் செய்தி நிறுவனம். தாலிபான் காபூலைக் கைப்பற்றிய, மறுநாள் காலையில் நான் என் அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கு வேலைக்கு வர வேண்டாம் என சொன்னார்கள்.
தாலிபானின் ஆட்சியில் பெண்கள் இனி ஆர்டிஏவில் வேலை செய்ய அனுமதியில்லை என அவர்கள் கூறினர். அரசு நடத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை மட்டும் வேலைக்கு வர வேண்டாம் என கூறியுள்ளனர். தனியார் சேனல்களில் பெண்களுக்கு இதேப் போன்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை.
இனி ஆப்கானிஸ்தானில் வாழ்வது கடினம். எனக்கு ஏதேனும் ஆதரவு கிடைத்தால், நான் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிவிடுவேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது' எனக் கவலையுடன் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்