'தெரியும் என்ன தேடி வருவாங்கன்னு'... 'கார் டிக்கி வேண்டாம், வேற ஐடியா இருக்கு'... கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் இளம்பெண் செய்த மாஸ் சம்பவம்'... கேவலப்பட்டு போன தாலிபான்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் பெண்களிடம் எவ்வளவு மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள் என்பது குறித்த பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றிய அடுத்த கணமே, இனிமேல் அங்கு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது எனப் பலரும் ஆப்கானை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் பல பெண்கள் இனிமேல் தங்கள் உயிருக்கு இங்குப் பாதுகாப்பு கிடையாது என வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கினார்கள்.
அந்த வகையில் ஆப்கான் நாட்டின் முதல் பெண் மேயரான 29 வயது Zarifa Ghafari தமது உயிருக்கு இனி உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்துள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதாகத் தகவல் வெளியான நிலையில், மேயர் Zarifa Ghafari-யை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற அவரது ஆதரவாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏனெனில் தாலிபான்களின் முதல் குறி Zarifa தான் என்பதை அவரது ஆதரவாளர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அவர் அஞ்சியது போலவே அன்று இரவே Zarifaவின் குடியிருப்புக்குள் தாலிபான்கள் நுழைந்தனர். உள்ளே வரும்போதே Zarifa எனச் சத்தம் போட்டுக் கொண்டு வந்த தாலிபான்கள், Zarifa அங்கு இருக்கிறாரா எனத் தேடியுள்ளார்கள்.
அவர் அங்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட தாலிபான்கள், அந்த குடியிருப்பின் காவலாளியிடம் சென்று Zarifa எங்கே எனக் கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் தெரியாது எனக் கூற, அவரை மூர்க்கத்தனமாகப் போட்டு அடித்துள்ளார்கள். இதற்கிடையே தாலிபான்கள் தன்னை தேடி வருவார்கள் என்பதால் அவரும் அவர் குடும்பமும் தாலிபான்களிடம் சிக்காமல் இருக்க, இரவோடு இரவாக ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
குடும்பத்துடன் காபூல் விமான நிலையம் சென்ற அவர், தாலிபான்களின் கண்ணில் சிக்காமல் இருக்க, காருக்குள் ஒளிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். Zarifa காரின் பின்னால் அமராமல் காரின் உள்ளேயே அமர்ந்து தப்பித்துச் சென்றுள்ளார். அவர் பக்காவாக போட்ட திட்டத்தால் விமான நிலையத்தை அடைந்ததும் துருக்கியைத் தூதரக அதிகாரிகளே பத்திரமாக விமானத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது ஜெர்மனியின் Düsseldorf நகரில் அச்சுறுத்தல் எதுவுமின்றி பத்திரமாக இருப்பதாக Zarifa Ghafari தெரிவித்துள்ளார். Zarifa பத்திரமாகத் தப்பிச் சென்றதை அறிந்த தாலிபான்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதுபோன்று திட்டம் போட்டுச் செயல்படுவதில் நாங்கள் தான் சிறந்தவர்கள் எனத் தாலிபான்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்கு Zarifa சம்பட்டி அடியைக் கொடுத்துள்ளார்.
கடந்த 2018ல் இருந்தே தாலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்துள்ளார் Zarifa Ghafari. தாலிபான்கள் ஆதரவு மிகுந்த Maidan Shar பகுதியில் தமது 26வது வயதில் Zarifa Ghafari மேயராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்