இது எல்லாத்துக்கும் ‘காரணமே’ இவங்கதான்.. அவங்க எல்லாரும் வெளியேறிட்டா ஒரு ‘குண்டு’ கூட வெடிக்காது.. இரக்கமே இல்லாமல் தாலிபான் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது.

இது எல்லாத்துக்கும் ‘காரணமே’ இவங்கதான்.. அவங்க எல்லாரும் வெளியேறிட்டா ஒரு ‘குண்டு’ கூட வெடிக்காது.. இரக்கமே இல்லாமல் தாலிபான் சொன்ன பதில்..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஆப்கானில் இருந்து மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர்.

Taliban blame US for Kabul airport blast

இந்த நிலையில் ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Taliban blame US for Kabul airport blast

இதனிடையே இந்த குண்டுவெடிப்பு குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜாபியுல்லா முஜாயித் (Zabihullah Mujahid)  அமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம் என்றும், அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கையால்தான் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

Taliban blame US for Kabul airport blast

இதுகுறித்து அமெரிக்காவுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாகவும், வெளிநாட்டவர் அனைவரும் வெளியேறிவிட்டால் அதன் பிறகு காபூலில் ஒரு குண்டு கூட வெடிக்காது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜாபியுல்லா முஜாயித் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்