ஓவரா ஆடுறாங்க...! அவங்க மெயின் 'சுவிட்ச்'லையே கை வைப்போம்...! - 'பஞ்சஷேர்' போராளிகளை 'அடக்க' தாலிபான்கள் போட்ட ராஜதந்திரம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகுவதாக கூறியிருந்த நிலையில் தாலிபான் தீவிரவாத படை ஆப்கானை கைப்பற்றிய சம்பவம் உலகறிந்தது.
இன்றுடன் அமெரிக்க ராணுவ வீரர்களும் ஆப்கானில் இருந்து வெளியேறும் சூழலில் இன்னும் பஞ்சஷேர் மாகாணம் மட்டும் தாலிபான் கையில் சிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் பஞ்சஷேர் மாகாணம், மலைகள் சூழ அமைந்திருக்கும். இந்த காரணத்தினாலேயே இந்த மாகாணம் இன்னும் தாலிபான் கையில் சிக்கவில்லை. அதோடு, ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சலே, பஞ்சஷேர் மாகாணத்தில் பதுங்கி இருந்துக்கொண்டு நான் தான் ஆப்கானிஸ்தனின் அடுத்த அதிபர் என கூறி வருகிறார்.
தாலிபானை சீண்டிய இந்த மகாணத்தை கைப்பற்ற பல முறை முயற்சிகள் நடந்தும் இன்னும் நெருங்க முடியவில்லை. இந்நிலையில், பஞ்சஷேர் மாகாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாலிபான் படையினர் தொலைத்தொடர்பு சேவையை துண்டித்துள்ளது.
இதன்காரணமாக பொதுமக்கள் எந்தவித தொடர்பின்றி சிரமப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதோடு, பஞ்சஷேர் பகுதியை சுற்றியுள்ள மாகாணங்களில் போக்குவரத்து சாலைகள் அனைத்தையும் தாலிபான் மூடியுள்ளது. அப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருள்கள் குறைவாக கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்