தைவானில் திடீர் நிலநடுக்கம்.. பொம்மை போல தூக்கி எறியப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்.. வீடியோ
முகப்பு > செய்திகள் > உலகம்தைவானில் ஏற்ப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ரயில் பாதிப்புக்கு உள்ளான வீடியோ காட்சிகள் மக்கள் மத்தியில் பரவி வருகிறது.
இரண்டு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் தீவு அமைந்திருப்பதால் தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த தீவு பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" மீது அமர்ந்திருக்கிறது, இது தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கிறது.
தைவானின் மிக மோசமான நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் செப்டம்பர் 1999 இல் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த நிலநடுக்கம் 2,400 க்கும் மேற்பட்டவர்களைக் பலி கொண்டது . தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்ஜிஎஸ் பூகம்பத்தை அதன் ஆரம்ப வலிமையான 7.2 லிருந்து 6.9 ஆகக் மதிப்பிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, நிலநடுக்கம் பிற்பகல் 2:44 மணிக்கு டைடுங்கிற்கு வடக்கே 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. யூலி பகுதியில் சனிக்கிழமை 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து ஏராளமான நிலநடுக்கங்கள் தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர். தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
Tremor de terra em Taiwan 😬😬 pic.twitter.com/v0zl8AeuF6
— joao paulo (@joaopau82561213) September 18, 2022
நிலநடுக்கத்தின் தாக்கம் ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் ரயிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள் மக்கள் மத்தியில் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்