என்ன 'பூச்சாண்டி' காட்டுறீங்களா...? ஆக்சுவலா, எங்களுக்கு 'அதுல' விருப்பம் இல்ல... 'நீங்க ஓவரா போனீங்கன்னா...' அப்புறம் நாங்களும் 'யாரு'ன்னு காட்டுவோம்...! - சீனாவை எச்சரித்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 1949-ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் சீனப்பகுதியில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் இதுவரை சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் என சொந்தம் கொண்டாடி வருகிறது.

என்ன 'பூச்சாண்டி' காட்டுறீங்களா...? ஆக்சுவலா, எங்களுக்கு 'அதுல' விருப்பம் இல்ல... 'நீங்க ஓவரா போனீங்கன்னா...' அப்புறம் நாங்களும் 'யாரு'ன்னு காட்டுவோம்...! - சீனாவை எச்சரித்த நாடு...!

ஆனால், தைவானோ இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு, சில நாட்களுக்கு முன் சீன அரசு தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என கூறி தைவானை சுற்றி போர் பயிற்சியையும் அதிகரித்து வருகிறது.

Taiwan country said it will not surrender to China.

இந்நிலையில் சீனா தனது தென்கிழக்கு பிராந்தியத்தில் தனது பழைய டிஎப்-11, டிஎப்-15 ரக ஏவுகணைகளை படிப்படியாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மிக நவீன ஹைப்பர் சானிக் ஏவுகணைகளை (டிஎப்-17) நிறுத்தியுள்ளது.

அதிநவீன இந்த டிஎப்-17 ஏவுகணைகள் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கக் கூடியவை ஆகும்.

Taiwan country said it will not surrender to China.

சீனாவின் இந்த செயல் குறித்து தைவான் ராணுவ அமைச்சகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'தைவான் ஜலசந்தியில் சீனாவின் செயல்பாடுகள் எங்களைத் சீண்டுவது போல இருக்கிறது. என்னதான் இருந்தாலும் தைவான் சீனாவுடன் எவ்வித ஆயுதப் போரிலும் ஈடுபடாது.

Taiwan country said it will not surrender to China.

நாங்கள் அமைதியான வழியிலேயே தீர்வுகளை காண விரும்புகிறோம். சீன கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சிவிடவில்லை. சீனா தரும் அழுத்தத்துக்கு பயந்து அடிபணிந்து போகமாட்டோம்.

தற்போது தைவானை சுற்றியுள்ள சீன விமானங்கள், கப்பல்களை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால் அதையும் ஒரு சுதந்திர நாடாக நாங்கள் எதிர்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்