“க்ளப்-க்கா வர்றீங்க?” - கல்வி நிறுவனங்கள் விதித்த தண்டனை. ‘மாணவியருக்கு ஆதரவாக’ கல்வித்துறை எடுத்த பரபரப்பு முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்அண்மையில் சுவிஸ் மாகாணங்களில் குட்டைப் பாவாடையும், இறக்கும் குறைவான மேலாடையையும் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவியருக்கு, “நீங்க ஒண்ணும் கிளப்புக்கு வர்ல.. ஸ்கூலுக்கு வர்றீங்க” என்று எச்சரிக்கை விடுத்ததுடன், வித்தியாசமான தண்டனையை கல்வி நிறுவனங்கள் அளித்துவந்ததாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையாகவே மாறியது.
அதாவது, அவ்வாறான ஆடைகளை அணிந்துவரும் மாணாக்கர்களுக்க, “நான் முறையாக ஆடை அணிந்திருக்கிறேன்” என்று எழுதப்பட்ட முழங்கால் வரையிலான முழுநீள ஆடை அளிகப்பட்டு அந்த ஆடையை அணிந்துவருமாறு கூறப்பட்டதுதான் அந்த வித்தியாசமான தண்டனை.
இதனால் இந்த சட்டைக்கு ‘அவமான’ சட்டை என்று மாணவியர் பெயரிட்டதுடன் இந்த தண்டனையை எதிர்த்தனர். மாணாக்கர்களின் பெற்றோரும் சில பெண்ணிய அமைப்புகளும் இந்த விவகாரத்தில் மாணவர்களுடன் துணை நின்று கல்வி நிலையங்களை எதிர்க்கவே, விஷயம் பெரிதாகியது.
இந்நிலையில், வாட் மாகாண கல்வி மற்றும் இளைஞர் துறை தலைவர் , மாணவிகள் இந்த தண்டனைச் சட்டையை அவமானமாக கருதுவதாகவும், அதனால் இந்த தண்டனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்