"இத மட்டும் பண்ணா உங்களுக்கு Fine தான்.." Switzerland இந்தியன் உணவகம் கொடுக்கும் அதிரடி 'Warning'.. "இது கூட நல்ல ஐடியா'வா இருக்கே.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் இந்திய உணவகம் ஒன்று, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான எச்சரிக்கை ஒன்றை விதித்துள்ளது.

"இத மட்டும் பண்ணா உங்களுக்கு Fine தான்.." Switzerland இந்தியன் உணவகம் கொடுக்கும் அதிரடி 'Warning'.. "இது கூட நல்ல ஐடியா'வா இருக்கே.."

Also Read | சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த டிராவிட்.. வீடியோவ அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போன 'CSK'

சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் உள்ள பேடன் நகரில் அமைந்துள்ளது கேசனோவா ரெஸ்டாரண்ட். இந்திய உணவகமான இங்கே, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

அப்பகுதியில் மிகவும் பிரபலமான உணவகமாக இது கருதப்பட்டு வரும் நிலையில், அதன் உரிமையாளர் அசத்தலான ஒரு எச்சரிக்கையை நடைமுறைபடுத்தி வருகிறார்.

அதாவது, தன்னுடைய ரெஸ்டாரண்டிற்கு வந்து உணவருந்தும் வாடிக்கையாளர்கள், தங்களின் தட்டில் உள்ள சாப்பாட்டை முழுவதையும் சாப்பிட்டு முடிக்காமல் மீதி வைத்தால் அவர்களுக்கு ஐந்து சுவிஸ் ஃபிராங்குகள் (இந்திய மதிப்பில் சுமார் 420 ரூபாய் ஆகும்) அபராதமாக விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த உணவகத்தில் இப்படி ஒரு நடைமுறை பின்பற்று வருவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Switzerland indian restaurant fines for waste food

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சுமார் 90 சதவீதம் பேர் இந்த நடைமுறைக்கு ஆதரவாக இருந்து வருவது தான். உலக அளவில், ஏராளமான இடங்களில் மக்கள் பலரும் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான உணவுகள் வீணாகப் போவதை நாம் நிறைய பார்த்திருப்போம்.

மேலும் இந்த உணவகத்தில், Buffet முறையில் உணவு பரிமாறப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு விருப்பமான உணவை தேவையான அளுவ்க்கு எடுத்துக் கொண்டு உண்ணக் கூடிய வசதி இங்கே உள்ளது. அப்படி இருக்கும் போது ,பலரும் ஆசைப்பட்டு நிறைய உணவுகளை எடுத்து வைத்துவிட்டு பின்னாடி இறுதியில் போதும் என குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு இப்படி ஒரு நடைமுறையை அந்த உணவகம் கடைப்பிடித்து வருகிறது.

Switzerland indian restaurant fines for waste food

அபராதம் விதிக்கும் நடைமுறை பற்றி உணவக உரிமையாளர் சுல்மான் கோரி பேசுகையில், இதுவரை அப்படி யாரையும் அபராதம் எதுவும் செலுத்த வற்புறுத்தியது இல்லை என்றும், ஒரு எச்சரிக்கைக்காக தான் அப்படி நிபந்தனை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அதே வேளையில் யாராவது எங்களின் எச்சரிக்கையை புறக்கணிக்க விரும்பினால், அவர்களிடம் இருந்து நிச்சயம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவு வீணாகிச் செல்வதை தடுப்பதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய உணவகத்தின் உரிமையாளர் எடுத்துள்ள நடவடிக்கை, பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Also Read | "இனி அடிக்கடி சட்டை இல்லாம சுத்தணும்.." கடற்கரையில் 'Enjoy' பண்ணும் எலான் மஸ்க்.!.. வாழ்றாருயா மனுசன்

SWITZERLAND, INDIAN RESTAURANT, WASTE FOOD

மற்ற செய்திகள்