சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்துல அவரு பேர சொல்லவே கூச்சப்பட்டாரு'ல... இங்க ஒரு கிராமமே ஊரு பேர் சொல்ல வெக்கப்படுது.. அப்டி என்ன பேரா இருக்கும்??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்வீடன் : தங்களின் ஊர் பெயரை மாற்ற வேண்டும் என, வினோதமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர், கிராம மக்கள்.

சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்துல அவரு பேர சொல்லவே கூச்சப்பட்டாரு'ல... இங்க ஒரு கிராமமே ஊரு பேர் சொல்ல வெக்கப்படுது.. அப்டி என்ன பேரா இருக்கும்??

ஒரு பெயரில் அப்படி என்ன இருக்கப் போகிறது என பலருக்கும் தோன்றலாம். பெயர் என்பது, ஒரு நபர் அல்லது ஊர் அல்லது இப்படி எதையாவது ஒன்றின் அடையாளத்திற்காக மட்டுமே என்று கூடவும் நாங்கள் கருதலாம்.

ஆனால், ஒரு பெயரில் பல விஷயங்கள் இருக்கிறது என்பதைத் தான் இந்த சமத்துவம் எடுத்துரைக்கிறது. எதிர்நீச்சல் படத்தில், தன்னுடைய பெயரை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல், நடிகர் சிவகார்த்திகேயன் அவதிப்படுவார். இறுதியில், தனக்கு விருப்பமான வேறு பெயர் ஒன்றை வைத்துக் கொள்வார்.

கூச்சப்படும் மக்கள்

இப்படி, நிஜத்தில் கூட, பலர் தங்களின் பெயரை வெளியே சொல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தனி நபர் ஒருவரே தங்களின் பெயரை வெளியே செல்ல யோசிக்கும் போது, ஒரு கிராமமே தங்கள் கிராமத்தின் பெயரை பயன்படுத்துவதில், கூச்சப்பட்டு வருகிறது. அப்படி என்ன பெயராக இருக்கும் என்று கூட உங்களுக்கு தோன்றலாம்.

 

பெரிய தலைவலி இல்லை

சுவீடன் நாட்டிலுள்ள Fucke Lake என்ற நதிக்கரை அருகே அமைந்துள்ளதால், அந்த கிராமத்திற்கு 'Fucke' என்ற பெயர் உருவானது. முன்னொரு காலத்தில் இந்த பெயர் உருவாகியிருந்தாலும், சமூக வலைத்தளம் இல்லாத அக்காலத்து மக்களுக்கு அந்த பெயர், பெரிய தலைவலியாக இருந்திருக்காது.

சென்சார் வார்த்தை

ஆனால், டிஜிட்டல் யுகம் வளர்ந்த இந்த காலத்தில், இப்படி ஒரு வார்த்தை தங்கள் ஊரின் பெயரில் இருப்பதை வெளியில் சொல்லவே கிராம மக்கள் யோசிக்கின்றனர். இவை அனைத்தையும் விட, தங்களின் ஊர் பெயரை பேஸ்புக் தளத்தில், குறிப்பிட நினைத்தால், அது சென்சார் செய்யப்பட்ட ஆபாசமான வார்த்தை என வருகிறது. இதனால், தங்களின் ஊரின் பெயரை மாற்ற வேண்டியதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பெயரை மாற்ற கோரிக்கை

இது தொடர்பாக, தங்களின் அரசங்கத்திடமும், தங்களின் ஊர் பெயரை மாற்ற கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், டால்ஸ்ரோ (அமைதியான பள்ளத்தாக்கு என்று பொருள்) என பெயர் மாற்றவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல மாதங்களாக, இந்த பெயரினை மாற்ற அவர்கள் போராடியும் வருகின்றனர்.

கிராம மக்கள் தீவிரம்

இந்த ஊர் பெயரில் எந்த தவறும் இல்லை என பலர் கூறினாலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், ஆபாசமான பெயர் என சென்சார் செய்யப்பட்டு வருவதால் தான் இன்னும் வேகமாக, தங்கள் கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

SWEDEN, VILLAGE, NAME, ஸ்வீடன், கிராமம்

மற்ற செய்திகள்