'கொரோனா வார்ட்டே கதியென கிடந்த செவிலியர்'... 'கிளவுஸ் எல்லாம் கழற்றிட்டு இந்த டிக்கெட்டை புடிங்க'... செவிலியருக்கு அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

3 வேலை இலவச உணவுடன், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு மத்தியில் 60 திரைப்படங்களை பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்!?..

'கொரோனா வார்ட்டே கதியென கிடந்த செவிலியர்'... 'கிளவுஸ் எல்லாம் கழற்றிட்டு இந்த டிக்கெட்டை புடிங்க'... செவிலியருக்கு அடித்த ஜாக்பாட்!

ஸ்வீடன் நாட்டில் ஜனவரி 30 முதல் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இதில் முதல் கட்ட போட்டியில் வெற்றி பெரும் நபர் சகல வசதிகளுடன் 60 திரைப்படங்களை பார்க்க வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான போட்டி நடைபெற்றது.

இந்த டிக்கெட்டை வென்றவர்கள் ஒரு வாரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட தீவில் ஒரு கலங்கரை விளக்கத்தின் மேலுள்ள ஒரு பாதுகாப்பான கண்ணாடி அறையில் உட்கார்ந்து, அழகான இயற்கைக் காட்சிகளுக்கு மத்தியில் திரை அமைக்கப்படும் 60-வது படங்களை பார்க்க இந்த டிக்கெட்டை வென்றெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், அவர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுகளும் மற்ற வசதிகளும் அமோகமாக செய்து தரப்படும்.

sweden covid nurse to watch entire film festival alone in lighthouse

அதுமட்டுமின்றி வெற்றி பெற்றவரின் பாதுகாப்பு கருதி அவருடன் வெளி நபர் ஒருவரும் செல்ல நியமிக்கப்படுவார்.

இந்த போட்டியில் சுமார் 12 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சிறப்பு டிக்கெட் ஒரு வருட காலமாக கொரோனா தீவிர சிகிச்சை வார்டில் பணியாற்றி வந்த லிசா என்ரோத் என்ற செவிலியருக்கு வழங்கப்பட்டது. 

இதுகுறித்து திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது, இந்த டிக்கெட் மிகுந்த தகுதியுடைய ஒருவருக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்