'ரயில் தண்டவாளத்தில் அன்னப் பறவை செய்த காரியம்!'.. உடனடியாக 20 ரயில்களை ரத்து செய்து நிர்வாகம் காட்டிய நெகிழ்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனியில் அன்னப் பறவை ஒன்று இறந்ததற்காக அதனுடைய ஜோடி அன்னப்பறவை துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக 20 ரயில்களை ஜெர்மன் ரயில்வே துறை நிறுத்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

'ரயில் தண்டவாளத்தில் அன்னப் பறவை செய்த காரியம்!'.. உடனடியாக 20 ரயில்களை ரத்து செய்து நிர்வாகம் காட்டிய நெகிழ்ச்சி!

ஜெர்மனியின் Fuldatal பகுதியில் இருக்கும் ரயில் பாதையில், உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி அன்னப்பறவை ஒன்று உயிரிழந்தது. அதனை கண்டு அதனுடைய ஜோடி அன்னப்பறவை, இறந்த தன் ஜோடிப்பறவைக்காக துக்கம் அனுஷ்டிக்கும் போது அந்த ரயில் பாதையில் அமர்ந்து கொண்டது.

ALSO READ: 'அந்த வரலாற்று நிகழ்வுக்காக ஆயத்தமாகும் பிரிட்டன்!'.. ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் 'பிரெக்சிட் ஒப்பந்தம்'!

பார்ப்பதற்கே கண் கலங்கவைக்கும் இந்த காட்சியை அங்கிருந்த ரயில் போக்குவரத்து அதிகாரிகள் கவனித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பிரத்யேக கருவிகள் மூலம் மின்கம்பியில் சிக்கி இறந்த அந்த அன்னப் பறவையின் சடலத்தை மீட்டதோடு அதற்காக காத்திருந்த ஜோடி பறவையையும் பத்திரமாக அங்கிருந்து மீட்டு நதியில் கொண்டு போய் விட்டனர்.

எனினும் இறந்த தன்னுடைய ஜோடி அன்னப்பறவையின் இழப்பு தாங்காமல் துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக ரயில் பாதையில் அமர்ந்து கொண்ட அன்னப்பறவைக்காக 23 ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக அவை செல்ல நேர்ந்தது.

மற்ற செய்திகள்