Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

கடலில் மிதந்த மர்ம படகு.. சந்தேகத்தோட உள்ளே போன அதிகாரிகள்.. கொஞ்ச நேரத்துல மொத்த மாநிலமும் பரபரப்பாகிடுச்சு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மஹாராஷ்டிராவில் கடலில் மிதந்த மர்ம படகில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் இது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடலில் மிதந்த மர்ம படகு.. சந்தேகத்தோட உள்ளே போன அதிகாரிகள்.. கொஞ்ச நேரத்துல மொத்த மாநிலமும் பரபரப்பாகிடுச்சு..!

மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தின் கடற்கரையில் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த படகில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் இந்த படகை பார்த்திருக்கிறார். அதன்பிறகு அவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே, அந்த படகை சுற்றிவளைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

படகில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே மாநிலம் முழுவதும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஹரிஹரேஷ்வர் துறைமுகம் அருகே மீனவர்களால் படகு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, போலீசார் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பாளரான மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.

லேடி ஹான்

இதுகுறித்து பேசிய அவர்,"மூன்று ஏகே 47 துப்பாக்கிகள், ஆவணங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. சாலை மறியல் போடப்பட்டு, உயர் எச்சரிக்கை அழைப்பு விடுக்கப்பட்டது. கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. லேடி ஹான் என்று அழைக்கப்படும் இந்த கப்பல் ஆஸ்திரேலிய பெண் ஹனா லாண்டர்கன் என்பவருக்கு சொந்தமானது. அவரது கணவர் ஜேம்ஸ் ஹோபர்ட் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். அவர்கள் ஐரோப்பாவிலிருந்து மஸ்கட் சென்று கொண்டிருந்தனர். படகின் இயந்திரம் சேதமடைந்ததை அடுத்து மாலுமிகள் உதவிக்கு அழைப்பு விடுத்தனர். ஒரு தென் கொரிய போர்க்கப்பல் அவர்களை காப்பாற்றியது. ஆனால் கரடுமுரடான வானிலை காரணமாக படகை மீட்க முடியவில்லை" என்றார்.

பேரிடர் அழைப்பு

இந்நிலையில், படகில் இருந்த ஆயுதங்கள் குறித்து பேசிய கடலோர காவல்படை தளபதி ஜெனரல் பரமேஷ் சிவமணி,"இந்த படகு ஜூன் 26 அன்று ஒரு பேரிடர் அழைப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஓமன் வளைகுடாவில் இருந்து நான்கு பயணிகள் மீட்கப்பட்டனர். அதில் இங்கிலாந்து கொடி இருந்தது. இதுபற்றி படகின் மாஸ்டரிடம் பேசினோம். துபாயில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சி ஒன்று தங்கள் பதிவேட்டில் இருந்து அதே ஆயுதங்கள் காணவில்லை என்பதை உறுதிப்படுத்த எங்களை அழைத்தது. இந்த ஆயுதங்கள் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்றார்.

MAHARASHTRA, YACHT, WEAPONS, மஹாராஷ்டிரா, படகு, ஆயுதங்கள்

மற்ற செய்திகள்