'நாம எல்லாம் ஜாலியா இந்த வயசுல Enjoy பண்ணுவோம்'... 'ஆனா இந்த பையன பாத்தா'... மொத்த நெட்டிசன்களையும் உருகவைத்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களுக்குப் பயப்படாமல் துணிவுடன் எதிர்த்து நிற்கிறார் அகமத் மசூத்

'நாம எல்லாம் ஜாலியா இந்த வயசுல Enjoy பண்ணுவோம்'... 'ஆனா இந்த பையன பாத்தா'... மொத்த நெட்டிசன்களையும் உருகவைத்த இளைஞர்!

ஆப்கான் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தாலிபான்களுக்கு எதிரான போரைத் தாலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான அகமத் மசூத் அறிவித்துள்ளார்.

Surrender to the Taliban is not in my dictionary: Ahmed Masood

ஆப்கானின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கான் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார். பெரும் போராளியான இவரது தந்தை அகமத் ஷா, 1980களில் ஆப்கானில் நிலவிய சோவியத் எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர். 

Surrender to the Taliban is not in my dictionary: Ahmed Masood

இவர் ஆப்கான் மக்களின் தேசிய தலைவராக இன்று வரை பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தாலிபான்களிடம் சரணடைவது எனது அகராதியிலேயே கிடையாது என்று அகமத் மசூத் கம்பீரமாக  தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், ''நான் சரணடைவதை விட  இறந்து போகவே விரும்புகிறேன். நான் அகமது ஷா மசூதின் மகன்.

Surrender to the Taliban is not in my dictionary: Ahmed Masood

தாலிபான்களிடம் சரணடைவது எனது அகராதியில் கிடையாது. ஆனால் நாங்கள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறோம். எனது தந்தை எப்போதும் எதிரிகளிடம் பேசுவார். நாங்களும் பேசுவோம்” என அகமத் மசூத் தெரிவித்துள்ளார்.

Surrender to the Taliban is not in my dictionary: Ahmed Masood

இந்த பேட்டி இணையத்தில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் பலரும் அகமத் மசூத்தின் வீரத்திற்குத் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ளார்கள். லண்டனில் படித்து விட்டு, தனக்காக வாழ்க்கையை வாழாமல் ஆப்கான் மக்களுக்காகப் போராடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது எனப் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்