'என்னா அழகு டா'...'மெர்சலான சர்வதேச விஞ்ஞானிகள்'...ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சர்வதேச விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக யார் உலக அழகி என சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவில் பல ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

'என்னா அழகு டா'...'மெர்சலான சர்வதேச விஞ்ஞானிகள்'...ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவு!

Golden Ratio of Beauty Phi Standards" என்ற கிரேக்க கணித விதிமுறையை அடிப்படையாகக் கொண்டு, உலகின் மிகவும் அழகான பெண் யார் என்பதை கண்டறியும் ஆய்வு ஒன்றை அறிவியல் விஞ்ஞானிகள் நடத்தினார்கள். விஞ்ஞானிகள் பின்பற்றிய இந்த விதிமுறையானது, கிரேக்கர்கள் பழங்காலங்களில் அழகை வர்ணிக்க பின்பற்றிய முறையாகும். இதனை பின்பற்றி 'பெல்லா ஹேடிட்' (Bella Hadid) என்ற மாடல் அழகியை அறிவியல் ரீதியாக உலக அழகி என விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளார்கள்.

லண்டனை சேர்ந்த பிரபல முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான ஜூலியன் டி சில்வா, கோல்டன் விகித முறையை பின்பற்றி இந்த சோதனையை மேற்கொண்டுள்ளார். இந்த விதியின் படி அனைத்து தகுதிகளையும் பெற்று பெல்லா ஹேடிட் தேர்வு பெற்றுள்ளார். இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த 23 வயது மாடல் அழகியான பெல்லா ஹேடிட், 94.35 சதவிகிதம் கோல்டன் விகிதத்தில் பொருந்தி உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கும் பாப் பாடகி பியான்சேவுக்கு 92.44 சதவிகிதம் பொருந்தி உள்ளது. மேலும் அமெரிக்க நடிகை ஆம்பெர் ஹெர்ட் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

View this post on Instagram

Summer came like cinnamon Sosweet 🍯

A post shared by 🦋 (@bellahadid) on

BELLA HADID, SUPERMODEL, GOLDEN RATIO OF BEAUTY PHI STANDARDS