VTK M Logo Top

"இனிமே சூரியன பாக்குறப்போ எல்லாம் இந்த டவுட்டு தானே வரும்".. சூரியனின் நிறம் பற்றி எழுந்த விவாதம்.. விண்வெளி வீரர் சொன்னது என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மனிதன் இந்த உலகில் தோன்ற ஆரம்பித்தது முதலே ஏராளமான அதிசய நிகழ்வுகளும், இன்னும் அறியப்படாத ஏராளமான மர்மங்களும் தொடர்ந்து இருந்து தான் வருகிறது.

"இனிமே சூரியன பாக்குறப்போ எல்லாம் இந்த டவுட்டு தானே வரும்".. சூரியனின் நிறம் பற்றி எழுந்த விவாதம்.. விண்வெளி வீரர் சொன்னது என்ன??

Also Read | "அவரு Vibe ஆகுறது மட்டும் இல்லாம நம்மளையும் சேர்த்து Vibe ஆக்குறாரே".. பட்டையை கிளப்பும் காவலர்.. "சுத்தி நிக்குறவங்களே சொக்கி போய்ட்டாங்க"

இந்த உலகம் குறித்தும், இதனை சுற்றியுள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரியன், நிலா என அனைத்தையும் பற்றி அனைவருக்கும் பொதுவாக ஒரு அறிவியல் அறிவு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அப்படி பல காலமாக அனைவரால் நம்பப்பட்டு வரும் விஷயம், திடீரென உண்மை இல்லை என தெரியும் போது ஒருவித குழப்பமே உருவாகும்.

அப்படி தான் தற்போது முன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர், சூரியன் பற்றி தெரிவித்துள்ள விஷயம், இணையத்தில் மிக முக்கியமான பேசு பொருளாக மாறி உள்ளது. ட்விட்டரில் சூரியன் என்பது நிஜத்தில் வெள்ளை நிறம் தான் என்றும், அது பூமியின் வளி மண்டலம் காரணமாகவே அது மஞ்சள் நிறத்தில் தோன்றுவதாகவும் குறிப்பிடப்பட்டு போஸ்ட் ஒன்று வைரலாக தொடங்கியது.

Sun colour is not yellow its white says astronaut

ஆனால், பூமியை சுற்றி நிலா வருவது பற்றியும், 150 மில்லியன் தொலைவில் சூரியன் இருக்கிறது என்பது பற்றியும் அறிவியல்பூர்வமாக தெரிந்த நமக்கு சூரியன் என்றாலே மஞ்சள் நிறத்தில் தான் இருக்கிறது என்றே பெரும்பாலானோர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், சூரியன் நிறம் வெள்ளை தான் என்ற பேச்சு அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

Sun colour is not yellow its white says astronaut

அப்படி இருக்கையில், நாசா விண்வெளி மையத்தின் முன்னாள் விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, சூரியன் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் என்பதை உறுதி செய்து ட்வீட் செய்துள்ளார். விண்வெளி வீரர் என்பதால் பூமியின்  வளி மண்டலத்திற்கு வெளியே இருந்து பார்க்கும் போது சூரியன் வெள்ளை நிறத்தில் தெரியும் என்பதையும் உறுதி படுத்துகிறார் ஸ்காட் கெல்லி.

விண்வெளி வீரரே சூரியனின் நிறம் வெள்ளை தான் என குறிப்பிட்டுள்ளதால், இந்த விஷயமே தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "என்னோட கடைசி தொடர்".. ஓய்வு முடிவை எடுத்த பெடரர்.. மனதை உருக வைக்கும் அறிக்கை.. வேதனையில் ரசிகர்கள்

ASTRONAUT, SUN, SUN COLOUR IS NOT YELLOW ITS WHITE, NASA

மற்ற செய்திகள்