இலங்கையில் தேவாலயங்கள் உட்பட அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அரசு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையின் கொழும்புவில் தேவாலயங்கள் உட்பட அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் 165க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

இலங்கையில் தேவாலயங்கள் உட்பட அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அரசு!

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்புவில் கட்டுவப்பிட்டிய தேவாலயம், இன்னும் 1 தேவாலயம், 2 நட்சத்திர விடுதிகள் உட்பட 7 இடங்களில் முதலில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பின்னர் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8வது குண்டுவெடிப்பு சம்பவமும் நிகழ்ந்தது.

இயேசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூறும் வகையில் தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி, புனிதவெள்ளியாகக் கொண்டாடப்படுவதோடு,  இந்த ஈஸ்டர் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதலே சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெறுவது வழக்கம்.

ஏராளமான கிறிஸ்தவர்களால் ஆரவாரத்துடன் ஈஸ்டர் கொண்டாடப்பட்டு வந்தநிலையில், இலங்கையின் கொழும்புவில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களை அடுத்து இதனை விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதோடு, இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனிடையே முன்கூட்டியே இந்த சம்பவம் குறித்து இந்திய உளவுத்துறை எச்சரித்ததாக குறிப்பிட்டதோடு, இலங்கையில் தவிக்கும் இந்தியர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவின் உதவியினை நாடலாம் என அழைப்பு எண்களை வழங்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள மோடி, இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என்றும் கூறியுள்ளார்.

 

SRILANKA, BOMBBLAST, CHURCH, SAD