'இதுதான் என்னோட 'பர்த்டே ட்ரீட்'...'பள்ளிக்குள் மாணவன் செய்த கொடூரம்'...நடுங்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது பிறந்த நாளில் இரக்கமே இல்லாமல் 2 மாணவர்களை, மாணவன் ஒருவன் சுட்டு கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா கிளாரிட்டா காலிப் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் தனது 16-வது பிறந்தநாளில், பள்ளிக்கு வந்தான். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட ஆரம்பித்தான். இதனால் மற்ற மாணவர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் நிலைகுலைந்து போனார்கள்.
இதனிடையே மாணவன் நடத்திய கோர தாக்குதலில் 16 வயது சிறுமியும், 14 வயது சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் மூன்று பேரை சுட்டு. காயப்படுத்தினான். இந்த தாக்குதலால் பள்ளி வளாகமே போர்க்களம் போல காட்சி அளித்தது. பெற்றோர்கள் பதற்றடத்துடன் என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்து கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், '' கருப்பு உடை அணிந்த மாணவன் திடீரென பள்ளிக்குள் நுழைந்தான். அப்போது தனது 16வது பிறந்த நாளுக்கு இதுதான் பரிசு என திடீரென சுட ஆரம்பித்தான். இறுதியில் தன்னைத்தானே சுட்டு கொண்டான்'' என அதிகாரி கூறினார். மாணவர்களை கொடூரமாக சுட்டு கொன்ற மாணவன் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், அது மாணவர்கள் மத்தியில் பெருகி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பள்ளி வளாகத்தில் நடந்த 85வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.