'அதிர்ச்சியில் உறைந்த மக்கள்'...'இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்'... சுனாமி எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேசியாவின் மொலுக்காஸ் பகுதியையொட்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

'அதிர்ச்சியில் உறைந்த மக்கள்'...'இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்'... சுனாமி எச்சரிக்கை!

நேற்றிரவு 9.47 மணிக்கு  இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகியிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் மனாடோ என்ற நகரில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் உணரப்பட்டது. மேலும் சுலாவசி என்ற தீவிலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் உணரப்பட்டது.

இதனிடையே இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்தோனேசிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு  5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது.

EARTHQUAKE, TSUNAMI, MAGNITUDE 7.1, INDONESIA, US GEOLOGICAL SURVEY